| ADDED : மே 10, 2025 01:40 AM
செஞ்சி: செஞ்சி அருகே மாயமான 9ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது, 9ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் 26 ம் தேதி, தனது தாத்தாவுடன் அனந்தபுரத்தில் உள்ள வங்கிக்கு சென்றபோது மாயமானார். இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வந்தனர். நேற்று மாணவியை 19 வயது இளைஞர் வீட்டில் இருந்து போலீசார் மீட்டனர். மாணவியிடம் நடத்திய விசாரணையில், 19 வயது இளைஞர் உட்பட 6 பேர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. சிறுமி மாயமான வழக்கை போக்சோ வழக்காக மாற்றி, செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது இளைஞர் மற்றும் 18 வயதிற்கு குறைவான 5 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.