உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாளுக்கு முன் முன்பதிவு

அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாளுக்கு முன் முன்பதிவு

சென்னை : 'அரசு விரைவு பஸ்களில் பயணிக்க, இனி, 60 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்' என, விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார்.தமிழகத்தில், 300 கி.மீ., துாரத்திற்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சொகுசு மற்றும், 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம், தஞ்சாவூர், பெங்களூரு, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 1,100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை உள்ளிட்ட போக்குவரத்து கழகங்கள் சார்பில், 1,500க்கும் மேற்பட்ட விரைவு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ்களில், 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை அமலில் இருந்தது. பயணியரின் வசதிக்காக, தற்போது பயண முன்பதிவு காலம், 60 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, பயணியர், 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். தொலைதுார பயணம் மேற்கொள்ளும் பயணியர், இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.inமற்றும் tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை