உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 ஆண்டுகளில் 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை: ஐகோர்ட்டில் அரசு தகவல்

3 ஆண்டுகளில் 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை: ஐகோர்ட்டில் அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 636 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்' என, சென்னைஉயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, சிறைகளில் உள்ள கைதிகளின் தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை தொடர்பான மாநில அரசின் கொள்கைகளை கண்காணிக்க, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது.நீதிபதிகள் பி.வேல் முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், தமிழக உள்துறை சார்பில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது, 'பரோல்' விடுமுறை வழங்குவது தொடர்பாக, 2023ம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள சிறைகளில், 14 ஆண்டுகள் தண்டனையை முடித்த, 307 கைதிகளில், 43 பேர், முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க, தகுதி பெற்று உள்ளனர். பாலியல் வழக்கு களில், 'போக்சோ' வழக்கு களில் தண்டிக்கப்பட்ட கைதிகள், முன்கூட்டி விடுதலை பெற தகுதியில்லை. இது தவிர, 2022 முதல் 2025ம் ஆண்டு வரை, 636 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, ஜன., 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

உண்மை கசக்கும்
டிச 21, 2025 13:47

இந்த சுதந்திர பறவைகளில் எத்தனை பேர் இரண்டு திருடர் கட்சிகளை சார்ந்தவர்கள்.


அப்பாவி
டிச 21, 2025 13:42

ஏன் குற்றங்கள், வழிப்பறி, கொலை, கொள்ளைகள் அதிகமாயிட்டுன்னு இப்போ புரியுது.


பேசும் தமிழன்
டிச 21, 2025 12:36

விடுதலை செய்யப்பட்ட தண்டனை கைதிகளில் சாதாரண கைதிகள் இருந்தால் பரவாயில்லை..... ஆனால் குண்டு வெடிப்பு போன்ற பயங்கர குற்றவாளிகள்..... தேச விரோதிகள் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்..


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2025 10:12

அப்போ பீட்டர் ஞானசேகரன் 2026 தேர்தல் மூலம் எம் எல் ஏ


duruvasar
டிச 21, 2025 09:45

தேர்தல் வராயிருப்பதால் வரும் காலங்களில் திமுக அரசின் இளகிய மனசு உச்சத்தை தொடும். அது போக கைதிகள் விடுதலையில் இட ஒதுகீடு, சிறுபான்மையனார் போன்ற தகுதிகளும் இடம் பெறுமா ?


Shekar
டிச 21, 2025 11:23

அட போங்க சார், சிறுபான்மைதான் முக்கிய தகுதி. அடுத்த தகுதி கழக உடன்பிறப்பு.


Natarajan Ramanathan
டிச 21, 2025 09:38

636 கைதிகளில் எத்தனைபேர் இசுலாமிய தீவிரவாதிகள் என்பதை தெரிவிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை