உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா; மாஸ்க் அணிய அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா; மாஸ்க் அணிய அரசு அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.கொரோனா பாதிப்பு, 2019ம் ஆண்டு இறுதி முதல், 2023ம் ஆண்டு வரை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தாலும், தீவிர பாதிப்பாக இதுவரை மாறவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9sehf622&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது, ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தகவல்படி, கொரோனாவால் நாடு முழுதும் 257 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கேரளாவில் 95 பேர்; தமிழகத்தில் 66 பேர்; மஹாராஷ்டிராவில் 56 பேர்; கர்நாடகாவில் 13 பேர்; புதுச்சேரியில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு பரவலாக இருப்பதால், மக்கள் கவலை அடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதித்த நபர் உயிரிழந்துள்ளார்.இது குறித்து, தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது; ஆனால், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் உள்ளது. 'ஒமைக்ரான்' வகை வைரஸ் உட்பிரிவுகளான,ஜெ.என்., 1 மற்றும் எக்.இ.சி., ஆகிய தொற்றுகளே காணப்படுகின்றன.இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் குறைந்தே காணப்படுகிறது. ஆனாலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம். காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள டாக்டரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம்.

சென்னையிலும் பாதிப்பு

சென்னையிலும் கொரோனா தொற்று காணப்படுகிறது. குறிப்பாக, தி.நகர், சின்மயா நகர், நடேசன் நகர் ஆகிய பகுதிகளில் கொரோனாவால் சிலர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும், வெளியே யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தூயவன்
மே 22, 2025 18:54

மீண்டும் பணமழை சுகாதார துறையில் கொட்டும். டெண்டர் ஊழல் . இப்போதே தயார் ஆகி விடுவார்கள். நல்லவர்களுக்கு காலம் இல்ல. பணம்தான் பிரதானம் திருந்தாத ஜென்மங்கள். டாஸ்மாக் பணத்தை ஒளித்து வைப்பதற்கே இடம் இல்லை. இதில் "மீண்டும் கோரோனா" ? DMK காட்டில் மழை


spr
மே 22, 2025 17:50

கொரானாவுக்கு சித்த மருத்துவமே சிறந்த ஒன்று என்பதனை முந்தைய தாக்குதலின் போதே உணர்ந்திருக்கிறோம் கபசுரக்குடிநீர் உட்கொள்வது, உடல் தூய்மை மிக அவசியம் எனவே மாநில அரசு சித்த மருத்துவ முகாம்களை திறக்கவும் மற்றபடி இது உண்மையானால், பிரச்சினைகளை உருவாக்கும் பல அரசியல் குற்றவாளிகள் இதனால் தாக்கப்பட்டால் முடிவு நன்றாக இருக்கும் ஒருவேளை மாநிலத்தில் பெருகிவரும் பிரச்சினைகளைச் சமாளிக்க மக்களின் கவனத்தைத் திருப்பும் நடவடிக்கையோ


ராம.ராசு
மே 22, 2025 09:22

முகக் கவசம் அணிவதால், தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கொராணா பாதிப்பைத் தடுக்க முடியாது என்று சொல்லுகிறார்கள். ஆனால் அதைச் செய்ய வேண்டும் பொது மக்களை வற்புறுத்துகிறார்கள். முகக் கவசம் அணிவதால் இயல்பாகக் கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும் என்பது எல்லோராலும் உணர முடியும். அதே போல தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பது சரி தவறு என்பதைவிட, அதைப் போட்டுக் கொண்ட பிறகு பலருக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல சிலர் இறந்து போன நிகழ்வுகளையும் பார்க்க முடிகிறது. ஒரு பாதிப்பு என்பது ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொருத்தது. மிகப் பெரிய அளவில் கொராணா பாதிப்பு என்று சொல்லப்பட்ட காலத்திலேயே முகக் கவசம் அணியாமல், தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இன்னமும் ஆரோக்கியமாக இருக்கின்றவர் உண்டு. என்கிறபோது முகக் கவசம் என்பதை வலியுறுத்துவது மக்கள் மனதில் அச்சத்தையே கொடுக்கும். மதம் என்றாலும் சரி, மருத்துவம் என்றாலும் சரி அவரவர் விருப்பப்படி இருக்க வேண்டும். அரசு, அதிகாரத்தில் இருப்பவர்கள் வற்புறுத்துவது சரியல்ல. மற்றபடி.. கொராணா வைரஸ் என்பது ஏதோ இப்போதுதான் வருவது அல்ல. பள்ளிப் பாடப் புத்தகங்களில் வெகு காலத்துக்கு முன்பே எழுதப்பட்டு வந்துள்ளது.


Padmasridharan
மே 22, 2025 06:34

தடுப்பூசி எடுத்தவங்களுக்கு வருதா இல்ல எடுக்காதவங்களுக்கு வருதா சாமி


Mani . V
மே 22, 2025 04:49

முகக்கவசம் அணிவதால் "அப்பா"வின் பிள்ளைகளும், இளவரசரின் தம்பிகளும் மொள்ளமாரித்தனங்களில் ஈடுபடும் பொழுது பெண்களால் அடையாளம் கண்டு பிடிக்க முடியாது. அதுனால ஊபீஸ் ஹாப்பி அண்ணாச்சி


Ramesh
மே 22, 2025 07:32

லிஸ்ட்ல அந்த சார் ஐ விட்டுட்டீங்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை