உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 68,000 ஓட்டு சாவடியிலும் மனதின் குரல் நிகழ்ச்சி

68,000 ஓட்டு சாவடியிலும் மனதின் குரல் நிகழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக, வானொலியில் உரையாற்றுகிறார்.அதில் அவர், விளையாட்டு, சுயதொழில் போன்றவற்றில் சாதித்தவர்களை பாராட்டுகிறார். குறிப்பாக, சாதித்த ஏதேனும் ஒரு தமிழரை பற்றி தொடர்ந்து பேசுகிறார். வரும், 25ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசுகிறார். இது, லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பேச்சாக இருப்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கேட்கும் வகையில், மனதின் குரல் நிகழ்ச்சியை, 68,000 ஓட்டு சாவடிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யுமாறு, மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுக்கு, தமிழக பா.ஜ., உத்தரவிட்டுள்ளது.மேலும், அதில் பொது மக்கள் பங்கேற்ற பின், அவர்களுடன் புகைப்படத்தை எடுத்து, கட்சி தலைமைக்கு அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ