உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ் சக்கரம் கழன்று ஓடிய விவகாரம்; மேலாளர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்

பஸ் சக்கரம் கழன்று ஓடிய விவகாரம்; மேலாளர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராசிபுரம்: ராசிபுரம் அருகே அரசு பஸ் சக்கரம் கழன்று ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கிளை மேலாளர் உட்பட ஏழு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, 20க்கும் மேற்பட்ட பயணியருடன், அரசு டவுன் பஸ் ஒன்று சேலத்தை நோக்கி, நேற்று காலை புறப்பட்டது. வீரமலை ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது, இடதுபுற முன்பக்க சக்கரம் தானாக கழன்று ஓடி, ஓடையில் விழுந்தது.பின், கட்டுப்பாட்டை இழந்த பஸ், 30 அடி துாரத்துக்கு இழுத்தபடி சென்றது. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு சாலையோரம் நிறுத்தினார். இதனால் பயணியர் நிம்மதியடைந்தனர். அவர்கள், மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.தகவலறிந்த, அரசு போக்குவரத்து சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் விசாரித்தார். இந்த பஸ்சுக்கு கடந்த மாதம், 9ம் தேதி வீல் சர்வீஸ் செய்யப்பட்டு, 23ல் குறிப்பிட்ட இடதுபுற வீலுக்கு பேரிங் மாற்றியது தெரிந்தது.அதேசமயம் வாராந்திர பராமரிப்பு பணி, சோதனை ஓட்டம் நடத்தவில்லை. இதனால் டயர் கழன்றது தெரியவந்தது. எனவே, பணியில் அலட்சியம் காட்டிய ராசிபுரம் கிளை மேலாளர் துரைசாமி, இளநிலை பொறியாளர் தியாகு, போர்மேன் வெங்கடேஷ்வரன், தொழில்நுட்ப பணியாளர்கள் தர்மலிங்கம், செந்தமிழ்செல்வன், செல்வராஜ், மணிராசு என ஏழு பேரை, சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர், நேற்று மாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

baala
ஏப் 15, 2025 11:21

மேலாளர் பார்க்க மாட்டார், போர்மன், அதற்க்கு அந்த வேலையை செய்ய தொழிலாளர்கள் இருப்பார்கள் இல்லையா. அப்புறம் அந்த வண்டியை இயக்கிய ஓட்டுனருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் இல்லையா. இதெல்லாம் தெரியாமல் அந்த வண்டியை இயக்கினால் ஒன்றுமே தெரியவில்லை என்று தானே பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.


GMM
ஏப் 15, 2025 09:39

கோட்ட நிர்வாக இயக்குனர் சோதனை ஓட்டம், வார பராமரிப்பு அறிக்கை பெற்று இருக்க வேண்டும். சோதனை, பராமரிப்பு இல்லை என்று தெரிந்தால், பஸ் எடுக்க அனுமதித்து இருக்க கூடாது. முதலில் இவரை சஸ்பெண்ட் செய்து விசாரிக்க வேண்டும்.


RADHAKRISHNAN
ஏப் 15, 2025 09:27

மேலாளர் தினமும் காற்று அடித்து சக்கரத்தை சுற்றிப்பார்ப்பாரா என்ன? போக்குவரத்து ஊழியர்கள் என்றாலே ஏளனப்போக்குதான், ஒய்வுபெறும்போது பிடித்தம் செய்த பணப்பலன் கொடுப்பதில்லை? கடைசியில் இரண்டு காக்கி சட்டையும் டவுசருடன் வீட்டிற்க்கு அனுப்புகிறார்கள்


visu
ஏப் 15, 2025 13:04

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் வேலை செய்ய சம்பளம் வாங்கினீங்க இல்ல அப்புறம் வேலையை ஒழுங்கா செய்யாம பலபேர் உயிரோடு விளையாடுவது அரசு ஊழியர் என்ற அலட்சியமா


முதல் தமிழன்
ஏப் 15, 2025 08:27

எந்த அரசு துறை உருப்படியா வேலை செய்யிறாங்கன்னு சொல்லுங்கள்? லஞ்சம் கொடுத்தாலும் வேலை நடப்பது இல்லை. அரசு பஸ் ஒர்க்கஷாப்பில் சும்மா பொழுது ....


raja
ஏப் 15, 2025 08:22

ஹா ஹா ஹா... விடியலை நோக்கி உருண்டு ஓடி இருக்கும்...


theruvasagan
ஏப் 15, 2025 16:17

விடியல் அதலபாதாளத்தில் கிடக்கதுன்னு அந்த டயருக்கு கூட தெரிஞ்சிருக்குபோல. அதை பார்க்கத்தான் கழண்டு விழுந்தடித்துக் கொண்டு ஓடுதுபோல.


VENKATASUBRAMANIAN
ஏப் 15, 2025 08:06

எல்லாவற்றையும் விற்றுவிட்டு காயங்கடையில் உள்ளதை போட்டு இயங்குகிறார்கள். இதற்கு மேலிருந்து அடிமட்ட வரை உடந்தையாக உள்ளனர். விடியல் அரசுக்கு இதெல்லாம் தெரிந்தும் கண்ணை மூடிக்கொண்டு இருப்பார்கள்.இதுதான் திராவிட மாடல்


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 15, 2025 06:55

இந்த பஸ் டயர் உருண்டுகிட்டே இல்ல இருந்திருக்கு.


Kalyanaraman
ஏப் 15, 2025 06:46

ஸஸ்பண்ட் காலம் முடிந்த பிறகு திரும்ப இதே வேலையைத்தான் செய்யப் போகிறார்கள். கடும் தண்டனை மட்டுமே குற்றங்களை குறைக்கும். முதுகெலும்பற்ற சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கிற வர, இது போன்ற அவலங்கள் தொடர்கதை தான்.


கிஜன்
ஏப் 15, 2025 06:36

ரோலிங் ஸ்டாக்கில் .... மூவிங் பார்ட்ஸ் கழறுவது இயற்க்கை தான் ...என சட்டம் வந்து உளறுமே ....


Mani . V
ஏப் 15, 2025 05:22

திறமையற்ற மந்திரி சபையையும் சஸ்பெண்ட் செய்யலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை