உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 70 சீட் - துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கு துாண்டில் போட்ட த.வெ.க.,

70 சீட் - துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கு துாண்டில் போட்ட த.வெ.க.,

தமிழகத்தில், 100 தொகுதிகளை அடையாளம் காணும் பணிகளை, காங்கிரஸ் மேலிடம் துவக்கியுள்ள நிலையில், த.வெ.க., தரப்பில், 70 தொகுதிகள் ஒதுக்கவும், காங்கிரசுடன் கூட்டணி அமைக்கவும், திரைமறைவில் பேச்சு நடத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: மதுரையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடப்பதற்கு ஓரிரு நாட்கள் முன், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 2 நாள் பயணமாக சென்னை வந்தார். தமிழகம், புதுச்சேரி மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தினார். தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு, 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கடந்த 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, 26 தொகுதிகளில் வென்றது. இந்த 26 தொகுதிகள் எவை, இரண்டாவது இடத்திற்கு வந்த தொகுதிகள் எவை என கண்டறிந்து, அவற்றுடன் தற்போதைய 17 தொகுதிகளையும் சேர்த்து, மொத்தம், 100 தொகுதிகளை அடையாளம் காணும் பணியை, தமிழக காங்., நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். கட்சியின் டில்லி மேலிட ஒப்புதலுடன், இந்த பணி ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆலோசிப்பதற்காகவே, கிரிஷ் சோடங்கர் வந்தார். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சிக்கு, த.வெ.க., தரப்பில் இருந்து துாது வந்துள்ளது. 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு தர தயாராக இருப்பதாக, புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் முன்னணி தலைவர் ஒருவர் வாயிலாக, த.வெ.க., தரப்பில் பேசப்பட்டுள்ளது. 'தி.மு.க., கூட்டணியில், தற்போது காங்கிரஸ் நீடிக்கிறது. காங்கிரஸ் மேலிடமும், தி.மு.க., கூட்டணியில் உறுதியாக இருப்பதால், இப்போதைக்கு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. ஆனால், தேர்தல் நெருக்கத்தில், தொகுதி பங்கீட்டின் போது, காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க தி.மு.க.,வால் முடியாமல் போகலாம். அந்த சமயத்தில், காங்., தலைமை மாற்று கூட்டணிக்கு யோசிக்கும். அப்போது, த.வெ.க., கூட்டணிக்குத்தான், காங்., வந்தாக வேண்டும். அதுவரை, பொறுமையாகத்தான் எதையும் அணுக வேண்டும். இருந்தாலும், காங்., மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வாயிலாக, கட்சியின் தேசிய தலைமைக்கு, தமிழக சூழ்நிலைகள் தெரிவிக்கப்படும். அங்கிருந்து நல்ல செய் தி வந்ததும் தெரிவிக்கப்படும். அதுவரை, இரு கட்சியினரும் தொடர்பிலேயே இருக்கலாம்' என த.வெ.க., தரப்புக்கு காங்., தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான், மதுரை மாநாட்டில், தி.மு.க., - பா.ஜ., - அ.தி.மு.க.,வை விமர்சித்த விஜய், காங்கிரஸ் குறித்து வாய் திறக்காமல், பேச்சை முடித்துக் கொண்டு விட்டார். இவ்வாறு அந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Natarajan Ramanathan
ஆக 24, 2025 04:05

தீயமுக பிடியில் இருந்து காங்கிரஸ் வெளியே வந்து அதிக இடங்களில் போட்டியிட்டு வெல்ல இந்த தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு.


Srprd
ஆக 23, 2025 22:45

இது வெறும் பகல்கனவு. காங்கிரஸ் கட்சி, திமுக பிச்சை போடும் 8-10 தொகுதிகளை வைத்து கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். அதற்கு காங்கிரஸ் மேலிடம் சம்மதிக்கும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுகவின் முழு அடிமை.


S.jayaram
ஆக 23, 2025 19:55

விஜய் திமுகவுடன் கூட்டணி வைத்தால் கூட தோற்பார், அவரிடம் அரசியல் தெளிவில்லை ரிமோட் பொம்மை போல இயங்குகிறார், மதுரையில் அவர் செண்டிமெண்டாக கொடியேற்றி இருந்தால் ஓரளவு நம்பிக்கை இருந்திருக்கும்


veeramani
ஆக 23, 2025 18:59

மீடியாக்கள் மிகை படுத்தி நடிகர் விஜய் பற்றி பிரசுரிக்கிறார்கள் .சட்டசபை தேர்தல் என்பது பஞ்சாயத் மெம்பெர் தேர்தல் இல்லை. முதலில் த வே க எந்த சின்னத்தில் போட்டியிட போகிறது. அனைவருக்கும் ஒரே சின்னமா அல்லது வேறு வேறு சின்னமா பூத் கமிட்டி எவர் பொறுப்பு . இன்றும் பூத் கமிட்டியில்ஆளும் கட்சியும் அ தி மு க கட்சியும் மிக ஸ்ட்ராங் ஆக உள்ளனர் தொண்டர்களும் வாக்குகைளை எப்படி கொண்டுவருவது என இரண்டு கட்சிகளுக்கு மட்டும்தான் தெரியும் ஒவ்வொரு இருக்கையில் த வெ க பற்றி மிகைப்படுத்தி செய்திகள் வந்து கொண்டுள்ளன. சட்டசபை தேர்தலில் ஒரு இலக்கம் வெற்றிபெற்றால் நடிகர் விஜய் சந்தோஷப்படலாம்


அரவழகன்
ஆக 23, 2025 17:01

காங்கிரஸ் உருப்பட ஒரு வழி....


krishna
ஆக 23, 2025 15:40

7 SEATTE WORTH KIDAYAADHU INDHA MAFIA MAINO CONGRESS. AANA JOSEPH VIJAY ALLELUYA MAINO CERA ALLELUYA APPARAM ENNA .KALAKKUNGA.ONNA SERNDHU URUPPADAAMA PONA SARI.


Sridhar
ஆக 23, 2025 14:42

கிறிஸ்துவ கூட்டணி சரிதானே? வின்சிக்கும் இப்போவே ஒரு சோதனை ஓட்டம் விட்டா 29 பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சரியான முடிவெடுக்க ஏதுவா இருக்குமுல்ல? இப்போ கிறிஸ்துவ கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால், அப்போ திருட்டு கும்பலயும் சேத்துக்கிட்டு மாபெரும் கூட்டணி அமைக்கலாமுல்ல?


Santhakumar Srinivasalu
ஆக 23, 2025 13:12

போன முறை திமுக செலவில் எ ஏல் ஏ! இந்த தேர்தலில் யார் கவினிப்பர்?


Muralidharan raghavan
ஆக 23, 2025 12:49

காங்கிரஸ் கட்சிக்கு நான்கு முதல் ஐந்து சதவீதம் வாக்கு இருக்கலாம், அதுவும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில். இத்துடன் த வெ க இருபது சதவீதம் பெற்றாலும் கூட வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை. இது பாஜக கூட்டணிக்கு வலு சேர்க்கும்


நிக்கோல்தாம்சன்
ஆக 23, 2025 12:20

இனி போட்டியே கிருஸ்துவ கூட்டணி தவேக +காங்கிரஸ் +விசிக , திமுக கூட்டணி திமுக +முஸ்லீம் லீக்குகள்+உதிரி காட்சிகள, நடுநிலை கூட்டணி அதிமுக+பாஜக+பாமக+கிருஷ்ணசாமி கட்சி என்று மூன்றாகும் . தமிழக மக்களின் யோசித்து முடிவெடுக்கும் திறன் ஜெயிக்குமா ,அல்லது கண்ணை மூடிக்கொண்டு mgr, கருணா என்று ஓட்டு போடும் பழக்கம் மாறுமா என்று தான் யோசிக்கிறேன்


முக்கிய வீடியோ