வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஏற்கனவே பணம் வாங்கிக்கொண்டு ஆட்களை தேர்வு செய்து விடுவார்கள் பிறகு தேர்தல் எல்லாம் மற்றவர்களை ஏமாற்ற
தேர்தல் வரவுக்கு பிளான்.
மதுரை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 2025 ஜனவரி முதல் மார்ச் வரை மூன்று மாதங்களில் பல்வேறு பணிகளுக்கு, 7,557 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசின் பல்வேறு துறைகளுக்கும் ஊழியர்களை நியமனம் செய்ய பல்வேறு நிலைகளில் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இவ்வகையில், 2023ஐ காட்டிலும் விரைவாக தேர்வு நடத்தி பணி நியமனம் செய்துள்ளது.ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு வாயிலாக, 20 பதவிகளுக்கு 109 காலியிடங்களை பிப்., 27ல் நிரப்பியுள்ளனர். இதற்காக, 125 நாட்களில் தேர்வு முடிவு வெளியீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு, கலந்தாய்வு பணிகள் நடந்துள்ளன.இதேபோல, குரூப் - 4 பணியிடங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் என, 7,427 பணியிடங்கள் மார்ச் 12ல் நிரப்பப்பட்டுள்ளன. இதில், நேரடி நியமனங்களாக பட்டியலினத்தைச் சேர்ந்த, 441 பணியாளர்கள் நிரப்பப்பட்டுள்ளனர். இதற்கான பணிகள், 184 நாட்களில் நடந்துள்ளன.அறநிலையத்துறையில் உதவி ஆணையர் உட்பட, 21 பணியிடங்கள் மார்ச் 14ல் நிரப்பப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் 161 நாட்கள் நடந்துள்ளன. இவை அனைத்தும் 2023ம் ஆண்டு பணி நியமனங்களைவிட விரைவாக நடந்துள்ளது. இதேபோல, குரூப் - 1 குடிமை பணிகள் தேர்வு நடத்தி, 57 நாட்களில் அனைத்து பணிகளையும் முடித்து, மார்ச் 14ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தொகுதி - 1பி பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள், பிப்., 20ல் வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே பணம் வாங்கிக்கொண்டு ஆட்களை தேர்வு செய்து விடுவார்கள் பிறகு தேர்தல் எல்லாம் மற்றவர்களை ஏமாற்ற
தேர்தல் வரவுக்கு பிளான்.