உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7ம் வகுப்பு மாணவர் தற்கொலை ஸ்ரீமுஷ்ணம் அருகே சோகம்

7ம் வகுப்பு மாணவர் தற்கொலை ஸ்ரீமுஷ்ணம் அருகே சோகம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏழாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி வசந்தி,36; இவர்களுக்கு நிவாஸ்,16; நித்தீஷ்,13; ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள், அருகில் உள்ள அரியலுார் மாவட்டம் வரதராஜன்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 10 மற்றும் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் பள்ளிக்கு சைக்கிள்களில் செல்வது வழக்கம்.இந்நிலையில் நேற்று காலை வசந்தி சொந்த வேலையாக வேப்பூர் சென்றார். வீட்டில் இருந்த நிவாஸ் மதியம் பள்ளிக்கு புறப்படும் போது, நித்தீைஷ அழைத்தார். அவர், வர மறுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். நிவாஸ் மட்டும் பள்ளிக்கு சென்று வந்தார். மாலை வெகு நேரமாகியும் நித்தீஷ் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அதில், வீட்டிற்கு அருகில் உள்ள புழக்கத்தில் இல்லாத பழைய வீட்டில் நித்தீஷ் துாக்கில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.தகவலறிந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார், நித்தீஷ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை