உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சைபர் குற்றவாளிகள் 861 பேர் கைது

சைபர் குற்றவாளிகள் 861 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சைபர் குற்றங்களை தடுப்பதில், போலீசாருக்கு சவாலாக உள்ள, தொழில் நுட்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண, உதவி செய்யும் வகையில், கல்லுாரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பங்கேற்ற 'ஹேக்கத்தான்' போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு, ஒரு லட்சம், 75 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மேலும், 12 அணிகளுக்கு தலா, 5 ஆயிரம் ரூபாய், ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.இதற்கான நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், பரிசு தொகைக்கான காசோலைகளை வழங்கினார். நிகழ்ச்சி முடிந்த பிறகு, சைபர் குற்றப் பிரிவு தலைமையகத்தின் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் கூறியதாவது:சைபர் குற்றங்கள் தொடர்பாக, தினமும், 1930 என்ற உதவி எண்ணிற்கு, 750 அழைப்புகள் வருகின்றன. மோசடி குறித்து, இணையதளம் வாயிலாக, 450 புகார்கள் பதிவாகின்றன. கடந்த ஆண்டு, தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து, சைபர் குற்றவாளிகள், 1,673.85 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இவற்றில், 771.98 கோடி ரூபாய் முடக்கப்பட்டு உள்ளது. சைபர் குற்றவாளிகள் 861 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 83.34 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் ரோந்து குழு வாயிலாக, 15 போலி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மோசடிகளை ஊக்குவித்த, 121 வாட்ஸாப் குழுக்கள்; சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட, 2.04 லட்சம் சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
பிப் 06, 2025 07:34

தடுத்து இருப்பது சிறப்பு - ஆனால் தண்டனை வாங்கிக்கொடுத்து சவாலானது.


Mani . V
பிப் 06, 2025 06:01

இரும்புக்கை கோப்பால்: இந்த சைபர் குற்றவாளிகள் அப்படின்னா, அவுங்க மேல ஜீரோ கேஷ்தான் இருக்கிறது, அப்படின்னுதானே அர்த்தம்?


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 06, 2025 09:53

நீட் ஐ பலவருடங்களாக எதிர்த்து விட்டு நீட் கோச்சிங் செல்லும் மாணவிகளிடம் [நீட் செகண்ட் இயர் படிக்கிறீங்களா] என்று கேட்டபோதே நமக்குத் தெரியுமே ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை