உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் 93,000 பேர் ஏமாற்றம்; அரசுக்கு எதிராக ஜூலையில் போராட்டம்

போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் 93,000 பேர் ஏமாற்றம்; அரசுக்கு எதிராக ஜூலையில் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதிய ஊதிய ஒப்பந்த பேச்சில், போக்குவரத்து ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க, அவர்கள் முடிவு செய்துள்ளனர்.ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும்; நிலுவையில் உள்ள அக விலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு வசதி வழங்கப்பட வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, ஓய்வூதியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கிடையே, சென்னை குரோம்பேட்டையில் நேற்று முன்தினம் நடந்த போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தப் பேச்சில், இதற்கு தீர்வு கிடைக்கும் என்று ஓய்வூதியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதில் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் தலைவர் கதிரேசன் கூறியதாவது: எங்களின் ஒன்பது கோரிக்கைகளை, அமைச்சரிடம் வலியுறுத்தினோம். எங்களது கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை.இது, 93,000 ஓய்வூதியர்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாமல் வெளிநடப்பு செய்தோம். எனவே, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஜூலையில் போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

seshadri
ஜூன் 06, 2025 16:14

கேரளா தனியார் பேருந்துகளில் கட்டணம் மட்டும் வாங்கி கொண்டு டிக்கெட் கொடுப்பதே இல்லை. நான் சென்ற மாதம் பாலக்காடு சென்று மலம்புழா சென்று வந்தேன். மலம்புழாவிலிருந்து பாலக்காடு இரண்டு தனியார் பேருந்துகளில் வந்தேன் இரண்டிலு டிக்கெட் கொடுக்க இல்லை. யாரும் அதை பற்றி கேட்கவும் இல்லை.


Kjp
மே 31, 2025 10:20

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.இந்த சின்ன விஷயத்தை பூதாகரமாக ஆக்க கூடாது.


Amar Akbar Antony
மே 31, 2025 10:04

போக்குவரத்து துறை, அரசு மற்றும் ஆசிரிய வர்க்கங்கள் எல்லாமே அரசியல் வாதிகளின் கண்மூடித்தனமான சுயநலமுள்ள ஆதரவினால் கேடுகெட்டு போயிருக்கிறது.


veeramani
மே 31, 2025 09:29

தென் பா ண்டி நாட்டில் இருந்து ஒரு சிட்டிஸினின் கருத்து .. அன்றைய முந்தைய வருNM Coமஹாலிங்கம் போன்ற பேருந்துகளை தமிழக உடமையாக்கினார். பின்னர் பல போக்குவரத்து நிறுவனங்களாக்கினார்கள். ஆனால் கடன் மேல் கடன் வாங்கி நட்டத்தில் பேருந்துகளை ஓட்டினார்கள் இதில் ஊழியர்களுக்கு பலவகையான பாக்கிகள் வைக்கப்பட்டது. அண்டை மாநில கேரளா ...அங்கும் KSRTC இயக்கப்படுகிறது தொலைதூர இந்துக்களும் எக்ஸ்பிரஸ் களும் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் அங்கு பிரச்சினைகள் இல்லை அரசின் பகீடு தேவையில்லை. கேரளாவில் அனைத்து நகர பேருந்துகளும் தனியார்மயம். பஸ்களும் நல்ல பராமரிப்பில் உள்ளன. தமிழக அரசு இந்த மாடல்லை பின்பற்றலாமே ??????


shyamnats
மே 31, 2025 09:01

போக்கு வரத்து கழகமே நஷ்டத்தில் இயங்கும் போது , மகளிற்கு இலவச பயணம் எதற்கு ? ஒட்டு அறுவடை செய்வதற்கு, அரசு பணத்தை தப்பாக கையாள்வது, பின் எப்படி ஓய்வூ தியர்க்கு, அல்லது தொழிலாளருக்கு சம்பளம் போட முடியும்? நிர்வாகம் செய்ய தெரியாதவனிடம் , ஆட்சியை மக்கள் வழங்கினால் வேறு என்ன நடக்கும்.


SIVA
மே 31, 2025 08:59

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் , உங்கள் போராட்டத்தால் சல்லிக்காசு பிரோயோஜனம் இல்லை , அன்று அதிமுக ஆட்சி நீங்கள் போராடினால் இல்லை உங்களை போராட வைக்க உங்களுடன் ஆர் எஸ் பாரதி மாடல் மீடியா உங்கள் பக்கம் இருந்தது , இன்று நீங்கள் போராடினால் அது பெரிய செய்தியாக வராது .....


Bhaskaran
மே 31, 2025 08:29

உயர் பென்ஷன் தர்றோம்னு நூற்றுக்கணக்கான ஓய்வு பெற்ற தனியார் நிறுவன தொழிலாளிகளின் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு அக்னாலட்ஜ்மெண்ட் கூட தராத பிஎஃப் நிர்வாகத்தை கண்டித்து கட்டுரை எழுதுங்கள் ஐயா கோடி புண்ணியம் உங்களுக்கு


முக்கிய வீடியோ