உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் வழியில் படித்ததாக போலி சான்றிதழ்: டி.எஸ்.பி., உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

தமிழ் வழியில் படித்ததாக போலி சான்றிதழ்: டி.எஸ்.பி., உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ் வழியில் பயின்றதாக, 'குரூப் - 1' தேர்வில் போலி சான்றிதழ் சமர்பித்து பணிக்கு சேர்ந்த, வணிக வரித்துறை உதவி கமிஷனர், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட ஒன்பது பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னுரிமை

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசு பணிகளில், 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியம், 2019ல், நடத்திய குரூப் - 1 தேர்வில், தொலைநிலை கல்வியில் பயின்றவர்களும், தமிழ் வழியில் பயின்றதாக சான்றிதழ் வழங்கி, போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட பணிகளில் சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

இது தொடர்பாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திராவ் என்பவர், அங்குள்ள உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில், குரூப் - 1 தேர்வில், தமிழ் வழியில் படித்ததாக, 22 பேர் சான்றிதழ் சமர்பித்து உள்ளனர். அவர்களில் நான்கு பேர், மதுரை காமராஜர் பல்கலையில் தொலைநிலை கல்வியில், தமிழ் வழியில் பட்டப்படிப்பை முடித்ததாக, போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்து உள்ளது தெரியவந்துள்ளது.இதுகுறித்து, மதுரை வணிக வரித்துறையில் உதவி கமிஷனராக பணிபுரியும் சொப்னா, சேலம் மாவட்டம் ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார், காஞ்சிபுரத்தில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரியும் கலைவாணி. மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் முதுநிலை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, மதுரை காமராஜர் பல்கலையின், தொலைநிலை கல்விப்பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் புருஷோத்தமன் உட்பட, ஒன்பது பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
அக் 08, 2024 15:02

சிதம்பரத்தில காலேஜ் கூட போகாத ஆளுக்கு டாக்டர் பட்டமே கொடுத்தாங்க. ஆனாலும் யாரும் கோர்ட் க்கு போகல.


ஆரூர் ரங்
அக் 08, 2024 15:00

என்னடா இந்த தமிழுக்கு வந்த சோதனை?


Barakat Ali
அக் 08, 2024 11:13

அதிமுக ஆட்சியில் இந்த முறைகேடு நடந்துள்ளது.. நடவடிக்கைக்கும் அதுதான் காரணம் ......


Padmasridharan
அக் 08, 2024 10:00

இவங்க புகைப்படத்த ? போட்டா பகை ஆகிடுவோம்னு போடலையோ


Lion Drsekar
அக் 08, 2024 09:57

அன்றுமுதல் இன்றுவரை நேரடியாகவே படிப்பில் சேர்ந்து, தேர்ந்து அதற்க்கென இருக்கும் நபர்களைக் கைக்குள் பெற்றிருந்தால் இப்படி ஒரு வழக்கே பதிவாகியிருக்காது, இப்பவும் வீண்போகவில்லை, வழக்கு நடைபெறும் நேரத்தில் உடனடியாக சேர்ந்துவிட்டால், வழக்கு முடியும் முன் பட்டத்தை பெற்றுவிடலாம், பதவியும் காப்பாற்றப்படும், நான்காம் வகுப்பு படித்திவிட்டு லயோலா கல்லூரியில் நீங்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் நன் நான்காவது மட்டுமே படித்திருக்கிறேன் என்று அழுத முன்னாள் மத்திய அமைச்சர் இப்போது பல பட்டங்களைப்பெற்றுள்ளார், அதே போன்று எனக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தற்போது காலமாகிவிட்டார் அவர் பதவி ஏற்பதற்கு முன்பாக பல்கலைக்கழங்கத்தில் இருந்து மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் ஐயா, தங்களுக்கு ஒரு பட்டப்படிப்பு வாங்கிக்கொடுக்கிறேன் , ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூற அவர் மிகவும் நேர்மையான , கலைஞருக்கு வலதுகரமாக இருந்தவர், அவர் கூறினார் ஐயா வேண்டாம், இந்த வயதுக்கு மேல் எனக்கு படிப்பு எப்படி யாரும் என்று கேட்க அவர் , ஐயா நீங்கள் இந்த விண்ணப்பத்தில் கையெழுத்து மட்டும் போட்டால் போதும், மற்றவைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறறோம் என்று கூறினார், இதற்க்கு நான், இன்றைய பூச்சிமுருகன் மற்றும் அந்த சட்டமன்ற உறுப்பினர்களின் குடும்பம் சாட்சி, இவர் அது தவறு என்று மறுத்துவிட்டார், இன்றைக்கு எல்லாமே ஒருபுறம் வியாபாரம், மறுபுறம் எதுவுமே தெரியாமல் கேள்விகளை மட்டும் மீண்டும் எழுதி கேள்விக்கு சரியான பதில் எழுதாமல் எதையோ எழுதுபவர்களுக்கு பட்டங்கள் நேர்மையாக வழங்கப்படுகிறது இது பள்ளி முதல் பல்கலைக்கழங்கள் வரை உலகறிய நடைபெறுகிறது, இதற்க்கு சாட்சி தேர்வு nஹிரண்யாய நமஹ நடத்துபவர்கள், கண்காளிப்பவர்கள், விடைத்தாள்கள் திருத்துபவர்கள், அப்படி செய்யவேண்டும் என்று நேரடியாகவே விடைத்தாள்கள் திருத்தும் இடங்களுக்குச் என்று அறிவுறுத்தும் அதிகாரிகளே சாட்சி, இல்லை என்று யாராலும் கூற முடியாது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் ஒருவர் கூட எந்த பணியிலும் பணியாற்றமுடியாத அளவுக்கு எல்லாம் மீறி சென்றுவிட்டது, இது சத்தியம், எல்லா நிலைகளிலும் இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது . வாழ்த்துக்கள், வந்தே மாதரம்


KRISHNAN R
அக் 08, 2024 08:00

பு ள்ளுறுவவிகள்..... பயிற்சி மையம் மற்றும் தேர்வாணையம்.. இரண்டிலும் உள்ளனர்


raja
அக் 08, 2024 07:53

அட போங்கையா தமிழன்னு சொல்லி கிட்டு திரின்ச ஒரு ஒன்கொள் தெலுங்கு குடும்பத்தையே ஆளவிட்டான் தமிழன் இதெல்லாம் ஜுஜுபி...


raja
அக் 08, 2024 07:46

திருட்டு திராவிடத்தை விடியல் சார் உலகெங்கும் கொண்டு செல்கிறார் என்று நன்றாக தமிழனுக்கு புரிந்து விட்டது....


Kundalakesi
அக் 08, 2024 06:31

தேச துரோக வழக்காக மாற்றி நாடு கடத்த வேண்டும். சில ஆயிரம் அபராதம், சில மாத சிறை அல்லது பரோல் என சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி வெளியே சுற்றுவார்கள். சாமானியனுக்கு ஒரு சட்டம், பதவியில் உள்ளவருக்கு ஒரு சட்டம். இது தான் 77 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சட்டம்.


Kasimani Baskaran
அக் 08, 2024 05:52

உண்மையில் தமிழில் படித்திருந்தால் இவ்வளவு வாய்ப்பு வசதிகள் இருப்பது தெரிந்திருந்தால் பலர் தமிழ் மூலமே படித்திருப்பார்கள்.


முக்கிய வீடியோ