மாடல் மாடலாக வலம் வரும் முதல்வர்
தமிழகத்தில் பாலியல், கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மாணவர்கள் உட்பட, பலரும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். தி.மு.க.,வில் உள்ளவர்களே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். ஆனால், 'திராவிட மாடல் அரசு' என, மக்களை மூளைச்சலவை செய்து, திசை திருப்புவதில் ஆளுங்கட்சி குறியாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மட்டும் மாடல் மாடலாக வலம் வருகிறார். அ.தி.மு.க., கூட்டணி குறித்து கட்டுக்கதையை அவிழ்த்துவிடுவதை தி.மு.க., நிறுத்த வேண்டும். - காயத்ரி ரகுராம்அ.தி.மு.க., மகளிரணி துணைச்செயலர்