உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் குடும்பத்தினருக்கு கமல் வீட்டில் விருந்து

முதல்வர் குடும்பத்தினருக்கு கமல் வீட்டில் விருந்து

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், தன் பிறந்த நாளை ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தடபுடல் விருந்து அளித்தார். தன், 71வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கமல் கொண்டாடினார். ராஜ்யசபா எம்.பி.,யான பின், முதல் பிறந்த நாள் விழா என்பதால், கமல் வீட்டிலும், கட்சி அலுவலகத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tjdj2jsb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ம.நீ.ம., தலைமை அலுவலகத்தில், துபாய் மந்தி பிரியாணி மாஸ்டர் தயாரித்த, மட்டன் பிரியாணி, சிக்கன் குருமா, மீன் வறுவல், கத்திரிக்காய் தொக்கு, தயிர் பச்சடி மற்றும் இனிப்புடன், 2,000 பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது. அதேபோல் நேற்று முன்தினம் இரவில், சென்னை போட் கிளப்பில் உள்ள தன் வீட்டில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு தனி விருந்துக்கு, கமல் ஏற்பாடு செய்தார். அதன்படி, முதல்வர் ஸ்டாலின், அவரது மகனும் துணை முதல்வருமான உதயநிதி மற்றும் குடும்பத்தினர், கமல் வீட்டுக்கு சென்றனர். கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். மேலும், கமல் வீட்டில் இருந்த அவரது அண்ணன் சாருஹாசனிடம் முதல்வர் நலம் விசாரித்தார். முதல்வர் மனைவி துர்கா, உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா, முதல்வர் மருமகன் சபரீசன் ஆகியோர், கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். வரவேற்பு அறையில் அமர்ந்து, நீண்ட நேரம் பேசினர். கமல் வீட்டில் தயார் செய்த உணவு வகைகளும், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகளும் பரிமாறப்பட்டன. மகிழ்ந்தோம் நெகிழ்ந்தோம்! என் அழைப்பை ஏற்று, என் இல்லத்திற்கு வருகை தந்து, என்னையும், சாருஹாசனையும் கவுரவப்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி. பொதுவாக, அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள்; மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், கருணாநிதியுடனான என் உறவு மூன்று தலைமுறையை தாண்டிய நெருக்கம் கொண்டது. துாய பேரன்பால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக் கட்டப்பட்டது, எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு. மாலை விருந்தில் மகிழ்ந்தோம்; நெகிழ்ந்தோம். - கமல், தலைவர், ம.நீ.ம., - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Govind
நவ 12, 2025 14:58

கமல் நீங்கள் அவர்கள் வீட்டுக்கே போய் விடலாம். இப்படி எல்லாம் மனிதர்கள் மாறுவார்கள் என்று நினைத்தால் ஆச்சிரியமாக இருக்கிறது.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 13:22

எத்தனை வருசத்துக்குத்தான் 70, 71 பிறந்த நாள் கொண்டாடுவீர்கள்?


Mani . V
நவ 09, 2025 08:16

நாடு முழுவதும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். ஆனா, நாம விருந்துக்கு போய் சிறப்பு செய்கிறோம். யார் தாலி அறுத்தாலும், யார் குடி கெட்டாலும் நமெக்கென்ன? ஆமா, அந்த SIR ருக்கு என்ன அர்த்தம்?


Mani . V
நவ 09, 2025 07:41

எதுக்கு சார் சிரிக்கிறீங்க? இல்லை பகலில் டார்ச் லைட் அடித்து, டிவியை தூக்கிப் போட்டு உடைத்த ஒரு ஜென்டில்மேனை நினைத்தேன். சிரிப்பு வந்து விட்டது.


Murugesan
நவ 09, 2025 07:41

உலகமாக அயோக்கியன் மிக கேவலமான பிறவி


karupanasamy
நவ 09, 2025 07:24

இவர் திருவையாறில் தியாகராஜரை பிச்சை எடுத்துச்சாப்பிட்டார் என்று பேசினார்


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 07:01

ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு இவ்வளவு மதிப்பா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை