உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடுவானில் விமானத்தில் காக்பிட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட பெண் பைலட்

நடுவானில் விமானத்தில் காக்பிட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட பெண் பைலட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு : ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து இலங்கையின் கொழும்புக்கு வந்த 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானத்தில், தன்னிடம் சொல்லாமல் கழிப்பறைக்கு சென்ற உதவி பைலட்டை காக்பிட்டுக்கு வெளியே நிற்க வைத்து, விமான கேப்டன் பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து இலங்கையின் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்சின் யு.எல்., 607 என்ற விமானம் சமீபத்தில் வந்தது. 10 மணி நேரம் பயண துாரம் உடைய இந்த விமானத்தை ஆண் கேப்டன் இயக்கினார். அவருடன் பெண் பைலட் உதவிக்கு இருந்தார். விமானத்தை இயக்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்படி, 'காக்பிட்' எனப்படும் பைலட்டுகள் இருக்கும் அறையில் கேப்டன் உடன் எப்போதும் உதவி பைலட் அல்லது விமான ஊழியர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். இந்நிலையில், அந்த விமானத்தில் கேப்டனிடம் சொல்லாமல், விமான ஊழியர் யாரையும் ஏற்பாடு செய்யாமல், பெண் பைலட் கழிப்பறைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.திரும்பி வந்த போது, விமானத்தின் கேப்டன் காக்பிட்டை உள்பக்கமாக பூட்டி விட்டார். பெண் பைலட்டை காக்பிட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால், பெண் பைலட் வெளியே நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது கேப்டனுக்கும், பெண் பைலட்டுக்கும் இடையே வார்த்தை மோதலை உண்டாக்கியது. பின், விமானத்தில் இருந்த மூத்த ஊழியர், கேப்டனை அழைத்து பேசி சமாதானப்படுத்திய பின், அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடியும் வரை கேப்டனுக்கு பணி வழங்கப்படாது என கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

hariharan
அக் 17, 2024 10:17

விமான கேப்டன் செய்தது மிகவும் தவறானது. அவர் காக்பிட்டை லாக் செய்த பிறகு அவருக்கு ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனை வந்தால் ?....


duruvasar
அக் 17, 2024 09:51

திராவிட பாணியில் சொல்வதென்றால் பைலட் ஆதிக்க சக்தி மனப்பான்மையுடன் நடந்துகொண்டிருக்கிறார். இதை எதிர்த்து அகில உலக முதன்மை பெண்ணீய தலைவர் நன்மதிப்புக்குரிய அக்கா கனிமொழி மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் போராட்டம் செய்வார்


karthikeyan
அக் 17, 2024 11:05

பைலட் பற்றிய செய்தியில் ஏன் திராவிடத்தை உள்ளே இழுக்கிறாய்? மற்றவர்களை குறைகூறும் மனப்பாங்கு மனிதத்திற்கு நல்லதில்லை. மாற்றிக்கொள்ள....


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 17, 2024 11:45

கார்த்திகேயா திராவிடம் ஹிந்துக்களை சீண்டாத நாள் இல்லை, பொறுமை இழந்த மக்கள் திராவிடனை சீண்டும்போது உங்களுக்கு பொறுக்கவில்லை தன்வினை தன்னை சுடத்தான் செய்யும். இதுக்கே கூவினா கதறினா எப்படி ?


Ramesh Sundram
அக் 17, 2024 09:12

இதே இந்தியாவாக இருந்தால் அந்த விமான உதவி பைலட் என்ன ஜாதி அவரை வெளியே வைத்து பூட்டிய விமானி என்ன ஜாதி என்று ஆராய்ந்து உதவி பைலட் ஒரு சிறுபான்மையினராக இருந்தால் அதே விமானி ஒரு பார்ப்பனராக இருந்தால் இன்று அனல் பறக்கும் விவாதம் நடந்து இருக்கும் நமது திராவிட ஊடக தொலைக்காட்சிகள்


Ram
அக் 17, 2024 08:16

யாரிந்த அரைவேக்காடு


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 17, 2024 12:27

அந்த அரைவேக்காடு தான் ....!!!


N.Purushothaman
அக் 17, 2024 06:51

துணை விமானி செய்தது தப்பு ....அதற்காக அப்படி ஒரு தண்டனையை கேப்டனும் கொடுத்து இருக்க கூடாது .....


raja
அக் 17, 2024 06:46

அவர் ரூல்சை சரியா கடை பிடித்து இருக்கிறார்... சொல்லிவிட்டு தான் செல்லவேண்டும்...


karthik
அக் 17, 2024 08:54

அதற்காக வெளியில் நிற்கவைத்து கதவை பூட்டவேண்டும் என்ற விதிமுறை கிடையாது.. முதல் முறை அப்படி செய்தால் எச்சரிக்கை அல்லது தரை இறங்கியபிறகு அலுவலகம் மூலமாக தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி தன் இஷ்டத்துக்கு எல்லாம் ஆட கூடாது


raja
அக் 17, 2024 10:01

காக்பிட்டை மூடி வைத்து கொண்டு தான் பைலட்டுகள் வேலை செய்ய வேண்டும்.. இருவர் மட்டும் இருக்கும் பொது ஒருவர் வெளியே சென்றவுடன் மூடி இருப்பார்.. விமானம் பறக்கும் போது கேப்டன் என்ன சொல்கிறாரோ அதை கேட்பது கோ பைலட்களின் வேலை... இதுவும் ஒரு இராணுவ கட்டுப்பாடு போன்ற வேலைதான்...


RAAJ68
அக் 17, 2024 06:41

தலைப்பை சரியாக போடவும் தலைப்பை படித்துவிட்டு பகீர் என்கிறது காக்பிட்டுக்கு வெளியே என்று படிக்கும் போது விமானத்தின் வெளியே என்று தோன்றுகிறது. காப்பீட்டுக்கு வெளியே என்பது விமானத்திற்கு உள்ளே இருக்கும் பகுதி தானே.


Mohammad ali
அக் 17, 2024 07:27

தலைப்பு சரிதான்


புதிய வீடியோ