சில வரிகள்
மேட்டூர் மின் நிலையத்தில், கடந்த 19ம் தேதி மாலை, நிலக்கரி கட்டமைப்பு எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது. அந்த இடத்தில் பணி செய்து கொண்டிருந்த ஏழு ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் இருவர் இறந்தனர்; ஐந்து பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா, 10 லட்சம் ரூபாய், சிகிச்சை பெற்று வரும் ஐவருக்கு தலா, 2 லட்சம் ரூபாய், நிவாரண தொகையை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினர்.