செய்தி சில வரிகள்
* விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்க, தோட்டக்கலை துறைக்கு 800 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டு உள்ளது. அதை முழுமையாக செலவழிக்காமல், நிலுவை வைத்துள்ளனர். கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் குறை தீர்வு கூட்டங்களில், இது தொடர்பாக, அதிக மனுக்கள் வந்துள்ளன. அதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள மானிய உதவிகளை விரைவாக வழங்கி, இம்மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க, தோட்டக் கலைத் துறையினருக்கு உத்தர விடப்பட்டு உள்ளது.