சில வரி செய்தி
தமிழகத்தில் கடந்த ஆண்டு, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விதிமீறல்கள் தொடர்பாக, 30,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வியாபாரம் செய்தோர் 14,429; அசுத்தம் செய்தோர் 7,129; ரயில் பாதையை கடந்தவர்கள் 5,134; படிகளில் பயணம் செய்தவர்கள் 2,530; தேவையில்லாமல் அபாய சங்கிலியை இழுத்தவர்கள் 1,730 பேர் மற்றும் இதர விதிமீறல்களில் ஈடுபட்டோர் என, 30,000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.