இன்னார், இனியவர் என பாரபட்சம் பார்க்காத அரசு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 'தங்க பல்லி' மாயமானதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் உண்மைத்தன்மை இருந்தால், அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். கோவை பாலியல் சம்பவத்தில், 24 மணி நேரத்தில், குற்றவாளிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தி.மு.க., ஆட்சி என்பது சட்டத்தின் ஆட்சி. இன்னார், இனியவர் என்று பாரபட்சம் பார்க்காமல், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாக உள்ளது. மணிப்பூரை போல் கண்ணை மூடிக்கொண்டு, தி.மு.க., ஆட்சி உறங்கவில்லை. பா.ஜ., நடத்தும் போராட்டம், 'இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை' என்பது போன்றது. எந்த விஷயமும் கிடைக்காதவர்கள், இது போன்ற பிரச்னைகளை எடுப்பது, தேர்தலுக்காக நடத்தும் நாடகமே தவிர உண்மையான போராட்டம் கிடையாது. - சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சர், தி.மு.க.,