உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிநவீன வசதியுடன் உருவாகும் பிரம்மாண்ட சிறை

அதிநவீன வசதியுடன் உருவாகும் பிரம்மாண்ட சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெ.நா.பாளையம், ; கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட ஒன்னிபாளையம் ரோட்டில் அதிநவீன புதிய மத்திய சிறைச்சாலை வளாகம் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்படுகிறது.கோவையில் தற்போது காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை கடந்த, 1872ம் ஆண்டு நிறுவப்பட்டது.தமிழகத்தில் உள்ள மிக பழமையான சிறைச்சாலைகளில் இதுவும் ஒன்று. இங்குள்ள பல்வேறு பிளாக்குகளில் தற்போது, 200 பெண் கைதிகள் உள்ளிட்ட, 2,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.இட நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காணவும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், உயர்ந்த பாதுகாப்புடன், கைதிகளை அடைத்து வைக்க பெரியநாயக்கன்பாளையம் அருகே, ஒன்னிபாளையம் ரோட்டில், 327.33 கோடி ரூபாய் செலவில் புதிய மத்திய சிறைச்சாலை வளாகம் கட்ட கடந்த, மே 19ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பணிகள் விறு,விறுப்பாக நடந்து வருகின்றன.புதிய மத்திய சிறைச்சாலை வளாகம், 95.72 ஏக்கரில், மூன்று கட்டங்களாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டத்தில் மத்திய சிறை வளாகம் மற்றும் ஆண்கள் சிறை கட்டப்படுகிறது.இதில் ஆண்கள் சிறை மட்டும், 17.02 ஏக்கரில் அமைகிறது. இரண்டாம் கட்டத்தில் பெண்கள் சிறை, 4.43 ஏக்கரில் அமைகிறது. மேலும், 111 சிறைத்துறை அலுவலர்களுக்கான குவாட்டர்ஸ், 5.95 ஏக்கரில் அமைகிறது.முதல் பகுதி கட்டுமானத்தில் நிர்வாக அலுவலகம், ரிமாண்ட் கைதிகளை அடைத்தல், குற்றவாளிகளுக்கான ப்ளாக், கடுங்காவல் தண்டனை குற்றவாளிகளுக்கான அறை, சிறை மருத்துவமனை, சமையலறை, சமையல் காஸ் மற்றும் பாய்லர் அறை, தின்பண்டங்கள் தயாரித்தல் அறை, நீதிமன்றம், தூக்கு மேடை, ஜெனரேட்டர் அறை, காவலர்கள் அறை, கைதிகளை அழைத்து வரும் வாகனங்களை நிறுத்த இடம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. இது தவிர, சிறையில், ஒரு கண்காணிப்பாளர், 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 2 ஜெயிலர்கள், 6 உதவி ஜெயிலர்கள், 100 ஜெயில் வார்டர்கள் பணியாற்ற ஐந்து தளங்களுடன் கட்டடம் கட்டப்படுகின்றன.இதே போல பெண்கள் சிறை வளாகத்தில் நிர்வாக அலுவலகம், ரிமாண்ட் கைதிகள் அடைக்கும் அறைகள், கடுங்காவல் குற்றவாளிகளை அடைக்கும் அறைகள், சமையலறை, நீதிமன்றம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படுகின்றன.இது குறித்து, சிறை துறை அதிகாரிகள் கூறுகையில்,' புதிய சிறை அனைத்து அதிநவீன வசதிகளுடன் கட்டப்படும். சிறை கண்காணிப்பு அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக இருக்கும்.இங்கு ஒரே நேரத்தில், 3 ஆயிரம் கைதிகளை அடைத்து வைக்கலாம். முதல் கட்ட கட்டுமான பணி, 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 211.57 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்பாவி
ஜூன் 07, 2025 15:47

குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதில் சகல வித வசதிகளும் செஞ்சு குடுக்குறாங்கோ. நாடு வெளங்கிடும். ஏ.சி யும் குவாட்டரும் குடுங்க.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 07, 2025 14:38

தற்போது இருக்கும் சிறை வளாகத்தில் காம்ப்ளெக்ஸ் மல்டி பிளிக்ஸ் உயர் ரக அடுக்கு மாடி குடியிருப்பு போன்றவைகள் 2032ல் உருவாக்க தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்


SUBRAMANIAN P
ஜூன் 07, 2025 13:18

கைதிகளுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறை.. இதைவிட கேவலமான ஒரு திட்டம், வேற எதுவும் கிடையாது.. இப்படி இருந்தா தப்பு செய்ய எப்படி தயங்குவான்.


Ramalingam Shanmugam
ஜூன் 07, 2025 12:32

இப்பவே ரெடி பண்ணி வைக்கிறார்கள்


ديفيد رافائيل
ஜூன் 07, 2025 09:09

Coimbatore to பெரியநாயக்கன்பாளையம் 25km distance travel பண்ணனும். மாவட்ட நீதிமன்றத்தில் இந்த புதிய சிறைச்சாலை அமைய போகும் இடம் 27km. கைதிகள் அழைத்து செல்லும்போதும்/வரும்போதும் தப்பிக்க இந்த distance உதவியாக இருக்கும்.


புரொடஸ்டர்
ஜூன் 07, 2025 09:06

நரேந்திரமோடி


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 07, 2025 08:58

குற்றவாளிகளுக்கு அதி நவீன வசதியுடன் பாதுகாப்பான இலவச இருப்பிடம் .நேர்மையானவர்களுக்கு உடமைகளை இழந்தவர்களுக்கு பாதிக்கப்பட்ட வர்களுக்கு அடிப்படை வசதிகளற்ற பாதுகாப்பில்லாத வரிகளுடன் கூடிய வாழ்க்கை


V Venkatachalam
ஜூன் 07, 2025 08:23

மொத்த திருட்டு கூட்டத்தையும் உள்ளே அனுப்பிடணும்.


சந்திரன்
ஜூன் 07, 2025 08:10

இலவச போன் வைபை வசதி செய்து தருவாங்க


Padmasridharan
ஜூன் 07, 2025 07:50

லஞ்சம் வாங்கற அரசதிகாரிகளுக்கென்று தனியறைகள் வைக்கலாம். .


முக்கிய வீடியோ