உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்டோபர் 27ல் வங்கக்கடலில் உருவாகிறது புயல்!

அக்டோபர் 27ல் வங்கக்கடலில் உருவாகிறது புயல்!

சென்னை: அக்டோபர் 27ல் வங்கக்கடலில் புயல் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு Montha என பெயரிடப்பட்டு உள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qrqrsakq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக் கூடும். அக் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு Montha என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 29 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (அக் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (அக் 25) கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிப்புரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் (அக் 26) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.அக் 27ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருவள்ளூர்* சென்னை* ராணிப்பேட்டைஅதேபோல், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 28ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2வது காற்றழுத்த தாழ்வு!

இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான 2வது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

duruvasar
அக் 24, 2025 14:04

இந்த புயலை ஆந்திரா பக்கத்திற்கு திருப்ப கோரி ஒரு தீர்மானம் போடலாமே. இல்லையென்றால் ஒரு அவசரம் சட்டம் போடலாம்.


Vasan
அக் 24, 2025 14:44

இன்று காலை 10.30 மணிக்கே தீர்மானம் போட்டாகிவிட்டது.


SUBRAMANIAN P
அக் 24, 2025 13:28

அடுத்த தேர்தலுக்கு செலவுக்கு வெள்ளநிவாரணம் பெயரைச்சொல்லி ஒரு 2000 கோடியை மத்திய அரசிடம் இருந்து பெற்று ஆட்டைய போடலாம்னு பார்த்தா மழை வரமாட்டேங்குதே .. திமுக கவலை .


duruvasar
அக் 24, 2025 10:57

இந்த தடவை ரெண்டுல ஒன்னு பாத்துடுவோம்


Vasan
அக் 24, 2025 10:33

ஆக, தமிழ்நாட்டில் அனைத்து நீர் நிலைகளும் முழு கொள்ளளவில் உள்ளதால், இந்த தாழ்வழுத்த மண்டலம் ஓங்கோல் பக்கமாக திசை திருப்பி அனுப்ப தீர்மானம் ஏற்றபட்டுள்ளது. அது வாயு மற்றும் வருண பகவானுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக மக்கள் கவலைப்பட வேண்டாம்.தலை குனிய வேண்டாம்.


Field Marshal
அக் 24, 2025 10:31

கார்பொரேஷன் சாம்பார் சாதம் பொட்டலம் தயாரிக்கும் பணியில் ஆட்களை நியமித்து ஆறுதல் தருவார்கள்


முக்கிய வீடியோ