வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நரேந்திரமோடிக்கு சொகுசு தனி விமானங்கள். ஒவ்வொரு வாரமும் மக்கள் வரி பணத்தில் வெளிநாடுகளுக்கு பயணம்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணக்கந்தல் மோட்டூர் பகுதியில், இருளர் சமூக மக்களுக்கான தொகுப்பு வீடுகளை முறையாக கட்டி தராததால், ஆதார், பட்டா, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வீசியெறிந்து இருளர்கள் போராடி உள்ளனர். தன் தந்தையின் நினைவு சின்னமாக, வானுயர பேனா சிலை வைக்கவும், தன் மகனின் ஆசைக்காக, 'கார் ரேஸ்' நடத்தவும், பணத்தை வாரி இறைக்க தயாராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஏழை பழங்குடியின மக்களின் விஷயங்களில் மெத்தனம் காட்டுவது ஏன்? விளம்பரங்களில் சமூக நீதியின் காவலர்களாய் தங்களை தி.மு.க., அரசு முன்னிறுத்தி கொள்கிறது. ஆனால், நிதர்சனத்தில், பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலனை காக்காமல் அவர்களை போராட வைக்கிறது. தி.மு.க., அரசின் இந்த கொள்கையின் பெயர் சமூகநீதி அல்ல; கோபாலபுர நீதி. - நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,
நரேந்திரமோடிக்கு சொகுசு தனி விமானங்கள். ஒவ்வொரு வாரமும் மக்கள் வரி பணத்தில் வெளிநாடுகளுக்கு பயணம்.