உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  காட்பாடி நபரிடம் ரூ.3.24 கோடி மோசடி

 காட்பாடி நபரிடம் ரூ.3.24 கோடி மோசடி

வேலுார்: வெளிநாட்டில் பணிபுரியும், காட்பாடி நபரிடம், 3.24 கோடி ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் விசாரிக்கின்றனர். வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த, 47 வயது ஆண் ஒருவர், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது வாட்ஸாப் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை நம்பிய நபர், அதில் இணைக்கப்பட்டிருந்த செயலியை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, 3 கோடி 24 லட்சத்து 46,000 ரூபாயை முதலீடு செய்தார். அதன் பின், தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிந்தது. புகாரில், வேலுார் சைபர் கிரைம் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ