உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமான படை சாகச குழுவில் சென்னையை சேர்ந்த விமானியர்

விமான படை சாகச குழுவில் சென்னையை சேர்ந்த விமானியர்

ஸ்ரீபெரும்புதுார்,:இந்திய விமானப்படையின், 92ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், வரும் 6ம் தேதி 'ஏர் ஷோ' என்ற விமான சாகச நிகழ்ச்சி நடக்கவுள்ளது. காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியை இலவசமாக காணலாம்.இந்நிகழ்ச்சிக்கான இறுதி ஒத்திகை இன்று காலை, 11:00 மணி முதல் மெரினாவில் நடக்க உள்ளது. இதில், விமானப்படை வீரர்கள் குழுவினர், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்கின்றன. இந்திய விமானப்படையின், சூர்யகிரண் ஏரோபாட்டிக்' குழுவினர், ஒரே நேரத்தில் ஒன்பது விமானங்களை வைத்து வித்தை காட்டுவதில் கைதேர்ந்தவர்கள். இந்த அணியில் இடம் பெற்றுள்ள, சென்னையை சேர்ந்த குரூப் கேப்டன்கள் அஜய் தசரதி மற்றும் சித்தேஷ் கார்த்திக் ஆகியோர், ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று கூறியதாவது:பிரிட்டன், கனடா, இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் மட்டுமே, ஒன்பது விமானங்கள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் ஏரோபாட்டிக் அணி உள்ளது. அதேபோல், இந்தியாவும், இந்த சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு, ஆசியாவின் முதல் அணி என்பது பெருமையே.இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, நம் நாட்டு விமானப்படையின் வலிமை, திறன், நாட்டின் வான்பரப்பை பாதுகாப்பதில் அதன் ஈடுபாடு போன்றவை, கண்முன்னே கொண்டு வரப்படும். அரக்கோணம், கோவை, தஞ்சை, பெங்களூரு, தாம்பரம் விமானப்படைத்தளங்களில் இருந்து, தேஜஸ், டகோட்டா, ஹார்வர்ட் உட்பட 72 விமானங்கள், சாகசத்தில் ஈடுபட உள்ளன.இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியை உலக சாதனையாக மாற்ற, சென்னை மெரினா கடற்கரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை காண, 14 லட்சம் பேர் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.பாலக்கோடு வான்வழி தாக்குதல், கார்கில் உள்ளிட்ட போர்களில் நாடு வெற்றி பெற, பெண் விமானியரின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.அவற்றை நினைவுகூரும் வகையில், மெரினாவில் நடக்கவுள்ள விமான சாகச நிகழ்ச்சியில், 10க்கும் மேற்பட்ட பெண் விமானியர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை