உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 31 ஆண்டுகள் சிறை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 31 ஆண்டுகள் சிறை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தேனி: தேனி மாவட்டம் கூடலுாரில் தெருவில் விளையாடிய ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முடி திருத்தும் தொழிலாளி கோபாலகிருஷ்ணனுக்கு 61, போக்சோ சிறப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.கூடலுார் அருகேவுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் 5 வயது மகள் 2022 நவ., 20 ல் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் அவர் வராததால் பெற்றோர் சத்தமிட்டு அழைத்தனர். அப்போது அருகில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்து சிறுமி வந்தார். மேலும் பெற்றோரிடம் கோபாலகிருஷ்ணன் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். இதுகுறித்து கேட்ட சிறுமி பெற்றோருக்கு கோபாலகிருஷ்ணன் கொலை மிரட்டல் விடுத்தார்.அவரை எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ உள்ளிட்ட 4 சட்டப் பிரிவுகளில் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் தவமணி ஆஜரானார்.கோபாலகிருஷ்ணனுக்கு சிறுமியை கடத்தி வீட்டில் அத்துமீறி அடைத்து வைத்ததற்காக ஓராண்டு, போக்சோ சட்டப்பிரிவில் 20 ஆண்டுகள், ரூ.20 ஆயிரம், பலாத்காரம்செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். மேலும் சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.3 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யவும், வட்டி தொகையை 3 மாதங்களுக்கு ஒரு முறை பெற்றோர் எடுத்து குழந்தை நலனுக்கு செலவிடவும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை