மேலும் செய்திகள்
தினமும் ஒரு சாஸ்தா:தமிழக ஐயப்பன் கோயில்கள்-5
20-Nov-2024
ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.நலமுடன் வாழ...
தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே உள்ளது நயினாரகரம் சிவன் கோயிலில் திருவாரியன் தர்மசாஸ்தா என்னும் பெயரில் பிரம்மச்சாரி ஐயப்பன் இருக்கிறார். இவரை தரிசித்தால் மனநலம், உடல்நலம் பெருகும். 500 ஆண்டுகளுக்கு முன்பே வேதம் ஓதும் அந்தணர்கள் இங்கு குடியிருந்தனர். மக்கள் அவர்களை 'நைனார்' என அழைத்தனர். அதனால் நைனார் அகரம் என அழைக்கப்பட்ட இப்பகுதி தற்போது நயினாகரம் என்றானது. இப்பகுதியில் இருந்த தேவதைகள், பூதங்கள் தங்களுக்குரிய அவிர் பாகங்களை அந்தணர்களின் யாகத்தில் பெற்று வந்தன. இதை தடுக்க ஆரியங்காவு ஐயப்பனை அந்தணர்கள் சரணடைந்தனர். பூதநாதனான ஐயப்பன் பூதங்களை கட்டுப்படுத்தி இத்தலத்தில் மேற்கு நோக்கியபடி ஒருகால் குத்துக்காலிட்டும், ஒரு காலை தொங்கவிட்டும் அபயமளித்தபடி பிரம்மச்சாரியாக அருள்புரிகிறார்.இப்பகுதி மக்களின் குலதெய்வமான இவர், கேரளா ஆரியங்காவிற்கு நேரெதிரே இருப்பது சிறப்பு. மார்கழி மாத மண்டல பூஜையும், தமிழ் மாதப்பிறப்பன்று பூஜையும் விமரிசையாக இங்கு நடக்கும். தென்காசி - மதுரை சாலையில் 10 கி.மீ., தொலைவில் இடைகாலுக்கு முன்பு உள்ளது நயினாகரம். நேரம்: காலை 8:00 -10:00 மணி தொடர்புக்கு: 98947 12408, 70100 56505அருகிலுள்ள தலம்: அலர்மேல்மங்கை தாயார் வெங்கடாஜலபதி பெருமாள்நேரம்: காலை 8:00 - 10:00 மணி
20-Nov-2024