உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்தது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்தது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சாகித்ய அகாடமி மற்றும் புதுடில்லி ஜே.என்.யு., எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழ் துறை இணைந்து, கருணாநிதி நுாற்றாண்டு கருத்தரங்கை சென்னையில் நேற்று நடத்தின. கருத்தரங்கை துவக்கி வைத்து, 'முத்தமிழறிஞர் கலைஞரின் இலக்கிய ஆளுமை' என்ற புத்தகத்தை வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கருணாநிதி தன் வாழ்நாளில் 80 ஆண்டுகளை, பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்தவர்.

நுாற்றாண்டு விழா

தன் வாழ்வை தமிழ் சமூகத்தின் உயர்வுக்காக, மேம்பாட்டுக்காக அர்ப்பணித்ததால் தான், அவரால் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருக்க முடிந்தது. தொட்ட துறைகள் எல்லாவற்றிலும் கோலோச்சியவர். இலக்கியத்தை இளைப்பாறும் நிழலாக கருதினார். இலக்கியத்தின் வழியாக இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் மகத்தான பணியை சாகித்ய அகாடமி செய்து வருகிறது. ஒருவரின் இலக்கிய தகுதிக்கு, சாகித்ய அகாடமி தான் அளவுகோல் எனும் அளவிற்கு புகழோடு செயல்பட்டு வருகிறது. எழுத்தாளர்களையும், மொழிபெயர்ப்பாளர்களையும் ஊக்குவிக்கும் சாகித்ய அகாடமியின் பணி மகத்தானது. ஜே.என்.யு.,வுடன் இணைந்து, கருணாநிதி நுாற்றாண்டு விழாவை சாகித்ய அகாடமி கொண்டாடுவது சிறப்புக்குரியது. இந்த பல்கலையில், கருணாநிதி தான், தமிழுக்கென தனி இருக்கையை அமைத்தார். பின், 15 ஆண்டுகள் கழித்து, அந்த இருக்கையை தனி ஒரு துறையாக வளர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த வகையில், 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனி துறையை உருவாக்க, 5.30 கோடி ரூபாய் வழங்கினோம். பல்கலையில் உள்ள பன்னோக்கு கலையரங்கம் அருகே, திருவள்ளுவரின் சிலை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாரத ரத்னா

சாகித்ய அகாடமியும், ஜே.என்.யு.,வும் இணைந்து நடத்தும் இந்த விழா, கருணாநிதியை இந்திய இலக்கிய முகமாக அங்கீகரிக்கும் நாளாக அமைந்துள்ளது. சாகித்ய அகாடமி விருது பெறும் படைப்பாளர்களுக்கு, கனவு இல்லம் திட்டம் வாயிலாக, இதுவரை 15 அறிஞர்களுக்கும், 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்நோக்கம், படைப்பாளிகள் வாழும் காலத்திலேயே, அவர்களை போற்ற வேண்டும் என்பது தான். எழுத்தாளர்களை போற்றும் சமூகம் தான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.கவிஞர் வைரமுத்து பேசியதாவது:கருணாநிதிக்கு, சாகித்ய அகாடமி விருது, ஞானபீடம் விருது வழங்கப்படவில்லை. உயிரோடு வாழுபவர்களுக்கே இந்த விருதுகள் வழங்க முடியும் என்கின்றனர். பாரத ரத்னா விருது வழங்க, அந்த விதிமுறை இல்லை. எனவே, கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், சாகித்ய அகாடமி செயலர் ஸ்ரீனிவாசராவ், ஜே.என்.யு., பல்கலை துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், அமைச்சர்கள் சாமிநாதன், சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajasekar Jayaraman
ஜூன் 28, 2025 15:58

தன்முதியில் தானே தட்டிக் கொள்ளும் ஒரே மாடல் திருட்டு திராவிடம்


theruvasagan
ஜூன் 28, 2025 11:45

எழுத்தாளன் ரொம்ப முக்கியம். அதிலேயும் துண்டு சீட்டில் எழுதித்தரும் எழுத்தாளன் ரொம்ப ரொம்ப முக்கியம்.


ஆரூர் ரங்
ஜூன் 28, 2025 11:00

ஈவேரா சிறந்த எழுத்தாளர். திராவிட அரசியல்வாதிகள் பற்றி கூட 21 பக்க கட்டுரையை எழுதினாராம் . வீரமணி எதிர்த்தாலும் அவரது எழுத்துக்களை நாட்டுடைமையாக்கி அரசே இலவசமாக விநியோகிக்க வேண்டும்.


veeramani
ஜூன் 28, 2025 09:49

த மிழ்த்தாயின் பெருமைஇகு மகனார் கலைஞர் கருணாநிதியின் தவப்புதல்வர் ஸ்டா ளின் அவர்களுக்கு வேண்டுகோள். தமிழ் நூல் படைப்பாளிகளை போற்றுவது செல்ல சிறந்தது. சேர சோழ பாண்டிய மன்னர்கள் புலவர்களை போற்றுவதுபோல இன்றைய அரசு நன்கு போற்றுகீண்டது. வெறுமனே கவிதா, உளவியல் , காதல், இலக்கியங்களில் பல படை. ப்பாளிகள் வருகின்றனர். ஆனால் தொழில் நுட்பம், விஞ்ஞான நூல்களின் படைப்பாளிகள் மிக அரிது . சிறுது காலம் முன் காலம்சென்ற நெல்லை சு. முத்து அவர்களை ஏடுத்துக்காட்டலாம். நானும் மய்ய அரசில் விஞ்ஞானியாக பணிசெய்து பின்னர் இரண்டு விஞ்ஞான நூல்கள் வெளியிட்டு உள்ளேன். வாழ்வின் ஆதாரம் எலெக்ட்ரோபிளாட்டிங் தலைப்பில் தமில் நூல் வெளியிட்டுள்ளேன். தமிழக மின் முலாம் பூசும் தொழில் தற்போது சிறப்பாக வளர்ந்துவருகிறது. விஞ்ஞான நூல் படைப்பாளிகளை தமிழக அரசு கொண்டடாடும் என எதிர்பார்ப்பு உள்ளது


sridhar
ஜூன் 28, 2025 08:54

குறிப்பா திருமணம் ஆகாத பெண்களுக்கு தீர்வாக ஒரு சிறுகதை எழுதினாரே , அது எவ்வளவு பெரிய தமிழ் இலக்கிய சேவை .


vbs manian
ஜூன் 28, 2025 08:30

கட்சி சார்பு இருந்தால்தான் கெளரவம். தேசிய பார்வை கொண்டவர்களுக்கு எதுவும் கிடையாது. பாரதி கல்கி ஜானகிராமன் கொத்தமங்கலம் சுப்பு போன்ற பலர் நினைவுக்கு வருகிறார்கள்.


raja
ஜூன் 28, 2025 05:23

ஆக மஞ்சள் பத்திரிகைகள் இளித்தாளான் கட்டுமரத்தை போற்றணுமுன்னு சொல்ல வராரு இந்த ஸ்டிக்கர் அப்பா...


Rajasekar Jayaraman
ஜூன் 28, 2025 04:49

திராவிடத்தை புகழ்ந்து எழுதி விட்டாலே அவன் எழுத்தாளன் சபாஷ்.


Mani . V
ஜூன் 28, 2025 04:17

எப்படி? முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இளமை புகுத்தி விடும். என்றா?


சமீபத்திய செய்தி