உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நல்லா படிச்சவரு டாக்டர்; சரியாக படிக்காத நான் துணை முதல்வர்; உதயநிதி வெளிப்படை!

நல்லா படிச்சவரு டாக்டர்; சரியாக படிக்காத நான் துணை முதல்வர்; உதயநிதி வெளிப்படை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''என் தாய் மாமா நல்லா படிச்சு டாக்டர் ஆகிட்டாரு; நான் சரியாக படிக்காமல் துணை முதல்வர் ஆகிட்டேன்,'' என உதயநிதி பேசினார்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2025ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கி துணை முதல்வர் உதயநிதி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த விழாவில் பங்கேற்று உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி. முதலில் கவுன்சிலின் தலைவர் மருத்துவர் ராஜமூர்த்திக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mjxi9hqj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கவுன்சிலை பொறுத்த வரை அவர் உங்களுக்கு தலைவராக இருக்கிறார். பலருக்கு தெரியும். ஆனால் சில பேருக்கு தெரியாது. எனக்கு அவர் சொந்த தாய் மாமா. என்னை தூக்கி வளர்த்தவர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கோபாலபுரம் வீட்டில் நானும் அவரும் ரூம் மேட்ஸ். இருவரும் சேர்ந்து ஒன்றாகத்தான் படித்தோம்.

சரியாக படிக்காமல்...!

அவர் நல்லா படித்து டாக்டர் ஆகிவிட்டார். சரியாக படிக்காமல் நான் துணை முதல்வர் ஆகிவிட்டேன். இந்த நிலைமைக்கு நான் இங்கே நிற்பதற்கு காரணம் ராஜமூர்த்தி தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அழைத்ததற்கு தாய் மாமா ராஜமூர்த்திக்கும் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பூரிப்படைகிறேன்!

இங்கு வந்துள்ள ஒவ்வொரு செவிலியரின் முகத்தை பார்க்கும்போதும் மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது. உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் முகத்தை பார்ப்பதற்கு முன்பே செவிலியர்கள் முகத்தைத்தான் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைகிறேன். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

shyamnats
ஜூலை 30, 2025 08:55

சரியாக படிக்காமல் நான் துணை முதல்வர் ஆகிவிட்டேன். இந்த நிலைமைக்கு , வேறென்ன மக்கள்தான் காரணம். படிக்காவிட்டால் தன தி மு காவில் தலைமை என்று ஒப்புதல் வாக்குமூலம் வேறு .


Saravana
ஜூலை 29, 2025 21:51

தமிழ்நாட்டின் சாபக்கேடு இம்முறையும் ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு ஒட்டு போடவும். இன்பநிதி துணை முதல்வர் வருவார் வாழ்க திருட்டு திராவிடம்


சண்முகம்
ஜூலை 29, 2025 20:24

உங்க தாத்தா படிக்காமல் டாக்டர் பட்டம் "வாங்கினாரே." நீங்களும் "வாங்குவீங்க."


Maruthu Pandi
ஜூலை 29, 2025 17:56

நீங்கள் சினிமாவில் நடித்ததை வேண்டுமானால் முயற்சி திறமை என பாராட்டலாம் . தாத்தா உழைப்பில், மூத்த கட்சி உறுப்பினர்களை ஓரம் கட்டி விட்டு மேலேறி அமர்ந்தது எப்படி திறமையாக பார்க்கப்படும் திரு உதயநிதி அவர்களே ? இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?


S.V.Srinivasan
ஜூலை 29, 2025 16:20

என்ன செய்யறது ? எல்லாம் தமிழ் நாட்டின் தலையெழுத்து.


venugopal s
ஜூலை 29, 2025 15:36

மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் நாட்டின் பிரதமராகும் போது சரியாக படிக்காதவர் துணை முதல்வர் ஆவதில் தவறு ஒன்றுமில்லை!


vivek
ஜூலை 29, 2025 16:47

உனக்கு எவளோ அறிவா


vivek
ஜூலை 29, 2025 16:48

உன்னை வாழ்நாள் திராவிட கொத்தடிமை என்று சொல்வதில் பெருமை படுகிறோம் வேணுகோபால்


Paramasivam
ஜூலை 30, 2025 09:28

கொத்தடிமை சங்கத்தலைவருக்கு இவ்வளவு அறிவா? எல்லாம் 200 ரூபாயால் வந்தது போலும்?


SUBRAMANIAN P
ஜூலை 29, 2025 14:28

அதுக்கு காரணம் தமிழ்நாட்டு மக்களின் அதிபுத்திசாலித்தனம். உங்களைப்போன்றோருக்கு தங்கள் பொன்னான ஓட்டைபோட்டு தங்கள் பெருந்தன்மையை காட்டுகிறார்கள். அவர்கள் அழிந்தாலும் பரவாயில்லை என்ற உயர்ந்த எண்ணம்... எவ்வளவு கேவலப்படுத்தினாலும் திருந்தாத ஜென்மங்கள்.


Ramona
ஜூலை 29, 2025 11:50

ஆயிரம் சொன்னாலும் உண்மையான பேச்சுக்கு இவரை பாரட்ட வேண்டும்.


Ramona
ஜூலை 29, 2025 11:41

நீட் தேர்வு எழுதினாரா ? எழுதமலா?


Shiva
ஜூலை 29, 2025 08:15

உங்கள் தாத்தா படித்தா "டாக்டர்" பட்டம் வாங்கினார்?


சமீபத்திய செய்தி