உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அபுதாபி நிறுவன இன்ஜினியர் விபத்தில் பலி; ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க மக்கள் நீதிமன்றம் உத்தரவு

அபுதாபி நிறுவன இன்ஜினியர் விபத்தில் பலி; ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க மக்கள் நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்து வழக்கில் உயிரிழந்த இன்ஜினியர் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கவுதம், 35. இவர் துபாயில் உள்ள அபுதாபியில் இன்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுஸ்மிதா என்ற மனைவியும், 9 வயதில் யாஷ்வினி என்ற மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு, 29ம் தேதி அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகனை பார்க்க ஆகஸ்டு, 30ம் தேதி துபாயில் இருந்து கவுதம் வந்தார்.செப்.,12ம் தேதி நாமக்கல்லில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த கவுதம், மகளை பள்ளியில் கொண்டு விடுவதற்காக ஸ்கூட்டரில் சென்றார். நாமக்கல்- திருச்சி சாலை, நாகராஜபுரம் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் கவுதம் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கவுதம் பரிதாபமாக இறந்தார். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கவுதம் குடும்பத்தினர் இழப்பீடு கோரி நாமக்கல் மோட்டார் வாகன விபத்து காப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்ற விசாரணைக்கு இந்த வழக்கு எடுத்து கொள்ளப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி நல்லதம்பி, வக்கீல்கள் அய்யப்பன், சங்கர் ஆகியோர் சமரசம் செய்து தீர்வு ஏற்படுத்தினர். இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் இறந்து போன கவுதம் குடும்பத்திற்கு, 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதை கவுதம் குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதால், இந்த வழக்கில் சமரச தீர்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, 5 கோடி ரூபாய் இழப்பீடு தொகை பெறுவதற்கான உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, இறந்து போன கவுதம் குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வேலுமயில் உடன் இருந்தார்.வக்கீல் வடிவேல் கூறுகையில், இறந்து போன கவுதம் மாதம் ஒன்றுக்கு இந்திய ரூபாய் மதிப்புபடி, 3.25 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். அந்த அடிப்படையில், 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சமரசம் ஆகி உள்ளது. தமிழக அளவில் விபத்து வழக்கு ஒன்றில், 5 கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்து சமரசம் ஏற்படுத்தப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

நிக்கோல்தாம்சன்
டிச 20, 2024 20:03

அது என்ன மாதிரியான இன்சூரன்ஸ் என்றும் எப்படி இவர்கள் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்றும் சொன்னால் மற்றவர்களும் பயனடைவார்கள்


Krishna
டிச 20, 2024 10:12

இந்த சம்பளம் பெற வெளிநாடுகளில் அவர் படும் கஷ்டம், மனவேதனைகளும் அவருக்குத்தான் தெரியும்.


sundarsvpr
டிச 20, 2024 09:40

நீதிமன்ற வரவேற்கத்தக்கது. வரவு வந்தாலே உறவுகள் கூடிவிடும். இதனால் சாதக பாதகம் ஏற்படலாம். கணவன் சொத்தில் மனைவி குழந்தைகளுக்கு பங்கு உண்டு. 5 கோடியை எவ்வாறு பாதுகாப்பாய் வைத்திட உதவ முடியும் என்றால் நீதிமன்றம் ஆலோசனை கூற இயலுமா?


இறைவி
டிச 20, 2024 09:29

ராமச்சந்திரன், விபத்து மரணங்களில் இழப்பீடு என்பது, மரணித்த மனிதரின் வயது, அவரின் தற்போதய ஆண்டு வருமானம், அவர் ஓய்வு பெறும் வரை சம்பாதிக்கக் கூடிய தொகை, அவரின் குடும்ப பொறுப்புகள், அவரின் தாய், தந்தை உயிரோடிருந்தால் அவர்கள் காலம் வரை அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தொகை, போன்ற பல விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. திராவிடிய பகுத்தறிவாளர்களுக்கு பிரித்து பார்த்து காழ்ப்புணர்ச்சியை காட்டா மட்டுமே தெரியும்.


Anantharaman Srinivasan
டிச 20, 2024 12:00

இது private road accident .. எதுக்கு திராவிட பசங்களை வம்புக்கு இழுக்கிறே..


தமிழ்வேள்
டிச 20, 2024 21:11

ஸ்ரீ நிவாசன், அந்தணர்கள் ஆஸ்திகர்களை தேவையின்றி வம்புக்கு இழுத்து தகராறு செய்த வகையறாக்களை உங்கள் திராவிட நடுநிலை வகையறாக்கள் ஏன் இதேபோல் தட்டி கேட்கவில்லை.. வீட்டுக்கு ஆட்டோ வரும் என்று பயமா? அல்லது...


T Jayakumar
டிச 20, 2024 08:44

அனைத்து நாடுகளிலும் வரி உள்ளது. அரசாங்கம் நடத்த மக்களின் வரிப் பணம் தேவை.


R.RAMACHANDRAN
டிச 20, 2024 08:34

இந்த நாட்டில் செல்வந்தர்கள் மட்டுமே இது போன்ற தீர்ப்பை பெற முடிகிறது.இதிலென்ன பெருமை இருக்கிறது.


A.C.VALLIAPPAN
டிச 20, 2024 10:01

Brother Ramachandra before writing something please think twice he is not rich man he working . working in Abudhabi read properly he left his wife and children and his salary 3.25 Lakhs is normal salary for Engr. in Abudhabi. his wife and child position remaining life just think with their relatives. how she will manage child age is 9 may be his wife age below 35 . around us few humans but many tiger,dog, cat ... so in her or child position just think . and he is not getting free like drink illicit liquor and get five Lakhs . it is insured money. how much premium paid you know . dont write such comments.


People Channel
டிச 20, 2024 07:54

அவரை இழந்த குடும்பத்தின் கண்ணீர் ஒரு பக்கம். அப்பா என்று சொல்வதற்குள் தகப்பனை இழந்த பிள்ளை ஒரு பக்கம். வேதனை.. ஆனால் அரசுகள் அதற்கும் வரி வாங்கும்


Suresh
டிச 20, 2024 10:19

வருமானத்துக்கு மட்டும் தான் வரி உண்டு இழப்பீட்டிற்கு அல்ல


முக்கிய வீடியோ