உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அபுபக்கர் சித்திக்கிடம் ஐந்து நாள் விசாரணை

அபுபக்கர் சித்திக்கிடம் ஐந்து நாள் விசாரணை

சென்னை:பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக், 59; பயங்கரவாதி. இவர் மீது, கோவை தொடர் குண்டு வெடிப்பு உட்பட பல வழக்குகள் உள்ளன. 30 ஆண்டாக தேடப்பட்ட இவரை, இம்மாதம், 1ம் தேதி, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபுபக்கர் சித்திக்கை காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி மலர்விழி, ஐந்து நாள் காவலில் அபுபக்கர் சித்திக்கை விசா ரிக்க அனுமதி வழங்கினார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ