உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி மீது நடவடிக்கை; செப்., 3ம் தேதி அறிவிக்கிறார் ராமதாஸ்

அன்புமணி மீது நடவடிக்கை; செப்., 3ம் தேதி அறிவிக்கிறார் ராமதாஸ்

விழுப்புரம்: அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து செப்., 3ம் தேதி ராமதாஸ் அறிவிப்பார் என்று பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், மகனும், செயல் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1ikf1dam&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், அன்புமணியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இன்று பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது; அன்புமணியின் பதிலுக்காக மேலும் 2 நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம். செப்., 3ம் தேதி நிர்வாகக் குழு கூட்டம் கூட்டப்பட இருக்கிறது. அன்றைய தினம் அன்புமணி குறித்து விவாதம் நடத்தலாம் அல்லது விவாதம் நடத்தாமலும் போகலாம். அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து செப்., 3ம் தேதி ராமதாஸ் அறிவிப்பார். அவரது முடிவே இறுதி முடிவு. 2026ல் ராமதாஸ் அமைக்கும் கூட்டணி தான் வெற்றிக் கூட்டணி, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை