உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வில் கோஷ்டி அரசியலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை

பா.ஜ.,வில் கோஷ்டி அரசியலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை

சென்னை: தமிழக பா.ஜ.,வில், கட்சியை வளர்க்காமல், கோஷ்டி அரசியலில் ஈடுபடுவோர் மீது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அவர்களின் விபரங்களை, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்திற்கு எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக பா.ஜ.,வில் மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்களாக உள்ள சிலர், தங்களுக்கென தனி கோஷ்டிகளை உருவாக்கி வருகின்றனர். அவர்கள், தொண்டர்களை சந்தித்து, கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபடாமல், பூத் கமிட்டி கூட்டங்களில் பங்கேற்காமல், தங்களை முன்னிலைப்படுத்தியே நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், அக்கரையில், தமிழக பா.ஜ.,வின், 'சிந்தனை அமர்வு' கூட்டம், சில தினங்களுக்கு முன் நடந்தது. பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி தொடர்பாக, பல்வேறு வியூகங்களை நிர்வாகிகளிடம், சந்தோஷ் தெரிவித்தார். அவரிடம், பா.ஜ.,வில் தலை துாக்கியுள்ள கோஷ்டி அரசியல், அதனால் ஏற்படும் உட்கட்சி பூசல், கட்சியின் முடிவுகளை வெளியே கசியவிடுவோர் குறித்த விபரங்களை, சில நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்; அவற்றை, சந்தோஷ் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும், இவ்விபரங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மேலிட தலைவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவ டிக்கை எடுக்க வலியுறுத்து வதாகவும் கூறினார். அதன்படி, அவர்களின் விபரங்களை, தற்போது மேலிடத் தலைவர்களிடம், சந்தோஷ் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, தமிழக பா.ஜ.,வில் கோஷ்டி அரசியலில் ஈடுபடுவோர் மீது, கட்சி மேலிடம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

pakalavan
செப் 20, 2025 21:45

நயிநார் கட்சிபதவி பறிக்கபடுமா ? நயிநாருக்கு பதிலா எச் ராஜா...


pakalavan
செப் 20, 2025 19:32

ஆன்னாமலை, டுமீழிசை,வன்னதி சீனிவாசன், நாயனார்,எச் ராஜா, பொரி உருன்டை, நிர்மலா சுத்தராமன், என்று பல கோஷ்டி இருக்கு,


Venugopal S
செப் 20, 2025 17:24

அப்புறம் கட்சியில் யாருமே மிச்சம் இருக்க மாட்டார்களே!


duruvasar
செப் 20, 2025 15:10

ப்ராமினர் முன்னேற்ற கழகம் ஏற்கனவே திமுகவில் இணைந்துவிட்டதால் ஒரு வேலை மிச்சம்.


Raman
செப் 20, 2025 17:39

SVe???


Sridhar
செப் 20, 2025 14:56

கோஷ்டி அரசியல் வரக்கூடாதுனா மாநில தலைமை ஸ்ட்ராங்கா இருக்கணும். சும்மா பேருக்கு ஒருவரை தலைவர்னு நியமனம் செஞ்சீங்கன்னா, பாவம் அவுரு என்ன செய்வாரு? அவருக்கு சொந்த கட்சியை வளர்ப்பதா இல்ல கூட்டணி உறவுகளை வளர்ப்பதாங்கற கொழப்பத்துல விழி பிதுங்கி நிக்கறாரு. அண்ணாமலை மாதிரி ஒரு ஆளை தலைவரா போடுங்க. கட்சியை வளர்ப்பதுதான் ஒரே நோக்கம்னு ஒரு டாஸ்க் கொடுங்க. இப்போ 11% இருக்கா, இன்னும் மூணு வருசத்துல 20% ஆ ஆக்கணும்னு சொல்லுங்க. கட்சி எப்படி வளருதுனு அப்போப்போ செக் பண்ணுங்க. கூட்டணி வச்சா கட்சி மரியாதைக்கு குறைவு வர்ற மாதிரி வைக்காதீங்க. ஆட்சியில பங்கு இல்லாம எந்த டேஷுக்கு கட்சி நடத்தணும்? இன்னைக்கு இல்லேன்னாலும், ஒரிசா மாதிரி கூடிய விரைவில் ஆட்சியை பிடிக்கலாம்ங்கற நம்பிக்கை முதலில் வேண்டும். கூட்டணிக்கு வர்றவனே காலில் விழ தயாரா இருக்கான். அவன் கூட தெளிவா பேசி வழிக்கு கொண்டுவாங்க. சொடக்கு போட்டா டெல்லிக்கு ஓடிவந்து கூட்டணி போடறவங்க, நீங்க சொன்னா கேக்காமலா போயிடுவாங்க?


pakalavan
செப் 20, 2025 13:27

அண்ணாமலைய நீக்குன மாதிரியா ?


Velayutham rajeswaran
செப் 20, 2025 10:56

அப்படி என்றால் கட்சியை கலைக்கத்தான் வேண்டும் புல்லுருவிகள் களையெடுக்கப்படா விட்டால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி பெரும் பிளவை சந்திக்கும் தயாராக இருக்கவும்


Vasan
செப் 20, 2025 08:14

We want Shri.Annamalai to lead TN BJP. We do not want ex DMK / ex ADMK man to lead TN BJP. Tell this to Shri Amit Shah ji and Shri Modi ji. Otherwise BJP vote will go to DMK.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2025 08:58

கோஷ்ட்டி அடிதடிக்கு மூலகாரணம் இந்த அண்ணாமலை தானே?


புதிய வீடியோ