உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லை கடந்தால் நடவடிக்கை: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

எல்லை கடந்தால் நடவடிக்கை: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சட்டசபையில், ஒவ்வொரு துறையைச் சேர்ந்த அமைச்சர்களும், தங்கள் துறை சார்ந்த திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டனர். நன்மைகள் தரும் அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டதுடன், மத்திய அரசின் வக்ப் சட்டத் திருத்தம் போன்ற தீமைகளை, தடுக்கும் வகையிலான, தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளோம். கூட்டத்தொடர் நிறைவடைந்த நாளில், எதிர்க்கட்சி தலைவர் அவைக்கு வராததால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கும், கை குலுக்கி நன்றி தெரிவித்தேன்.நாம் நாகரிகமாகத்தான் நடந்து கொள்கிறோம். நம்மில் யாரேனும் அநாகரிகத்தின் எல்லையை கடந்தால், நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை. தமிழகத்தில், தி.மு.க., அரசு சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை தொண்டர்கள் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் உணர்ந்துள்ளனர். தி.மு.க., என்பது தமிழகத்தின் நலனை மட்டுமின்றி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற கட்சி என்பதை எதிரிகளின் மனசாட்சியும் சொல்லும். தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும். தி.மு.க.,வே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
மே 01, 2025 10:49

பொன்முடியும், rs பாரதியும், ராஜிவ் காண்டியும், சுந்தரவல்லியும், ஜவாஹிருல்லாவும் , நவாபும் , ஜாபர் சாதிக்கும் , அமீரும் , முகம்மதுவும் எல்லையை கடக்கவே மாட்டாங்க


Sivaswamy Somasundaram
மே 01, 2025 07:04

அநாகரீகத்திற்கு எல்லைக்கோடு?


Mani . V
மே 01, 2025 06:18

ஆமாம், யாரும் வடகொரியா எல்லை தாண்டி நடந்தால் காலில் அணிந்திருக்கும் காலணியை பறிமுதல் செய்வோம்.


வாய்மையே வெல்லும்
மே 01, 2025 05:55

தமிழகத்தில், தி.மு.க., அரசு சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை தொண்டர்கள் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் உணர்ந்துள்ளனர்.?? என்னய்யா காலேயிலேயே ஸ்ருதி சுத்தமாக உளறி கொட்டுகிறாய்.. திராவிட மாடல் ஆட்சியின் அவலம் சொல்லிமாளாது ..மக்கள் மூர்க்கன்ஸ் மேல காண்டாக உள்ளனர் என்பது கூட புரிந்துகொள்ள முடியாத அடிமுட்டாளாக இருக்கிறார்கள் சில பேர்வழிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை