உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலாவதி குளூக்கோஸ் வழங்கிய 3 ஊழியர்கள் மீது நடவடிக்கை 

காலாவதி குளூக்கோஸ் வழங்கிய 3 ஊழியர்கள் மீது நடவடிக்கை 

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி மருத்துவமனையில், கர்ப்பிணிக்கு காலாவதியான குளூக்கோஸ் வழங்கிய ஊழியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திருப்பூர், சாமிநாதபுரத்தை சேர்ந்த ஐந்து மாத கர்ப்பிணி, மாநகராட்சி டி.எஸ்.கே., தாய், சேய் நல விடுதிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய சென்றார். பரிசோதனைக்கு பின், அவருக்கு அங்கிருந்த ஊழியர் குளூக்கோஸ் பாக்கெட் வழங்கினார். அது காலாவதியான பாக்கெட் என்பதால், கர்ப்பிணியின் கணவர் அது குறித்து கேட்டார். அங்கு உரிய பதில் இல்லை. அங்கு திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கேட்ட போதும், முறையாக பதில் அளிக்காமல் மெத்தனமாகவும், மரியாதை குறைவாகவும், ஊழியர்கள் பேசியுள்ளனர். மாநகர நல அலுவலர் முருகானந்த் மற்றும் டாக்டர் கலைச்செல்வன் ஆகியோர் விசாரித்தனர். இறுதியாக, லேப் டெக்னீஷியன் நாகஜோதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், பொதுமக்களிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நர்ஸ் கோமதி மற்றும் பார்மசிஸ்ட் வீரபராசக்தி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ