உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதியோர் ஓய்வூதியம் கொடுக்காவிட்டால் நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர் உறுதி

முதியோர் ஓய்வூதியம் கொடுக்காவிட்டால் நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர் உறுதி

சென்னை: ''முதியோர் ஓய்வூதியத்துக்கான மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று வருவாய் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.பட்ஜெட் மீது சட்டசபையில் நடந்த விவாதம்:கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் : முதியோர் ஓய்வூதியத்தில் நிறைய பேரை சேர்க்கவில்லை என்ற புகார் உள்ளது.அமைச்சர் தங்கமணி : விரைவாக பட்டா கொடுக்க வாரந்தோறும் திங்கள் கிழமை மனு பெறப்படுகிறது. அதோடு, முதியோர் ஓய்வூதியத்துக்கும் மனு பெறவும், அதற்கான உத்தரவு கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கிருஷ்ணசாமி : பல ஊர்களில் இந்த உத்தரவு கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.அமைச்சர் தங்கமணி : வருவாய் கோட்டாட்சியர்களை இரண்டு முறை நேரில் அழைத்து, நானே இதற்கான அரசாணையை வழங்கியுள்ளேன். எங்கெல்லாம் கிடைக்கவில்லை என்று கூறினால், நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ