உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து விடுவிப்பு

நடிகர் அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து விடுவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: திரையரங்க நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு, ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை அடுத்து, இன்று (டிச.,14) சஞ்சல்குடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், பிரபல நடிகர்கள் அல்லு அர்ஜுன், பகத் பாசில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா - 2 தி ரூல் என்ற படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், கடந்த 5ல் வெளியானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ritegppw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த படத்தின் சிறப்பு காட்சி, ஹைதராபாதில் உள்ள சந்தியா தியேட்டரில், கடந்த 4ம் தேதி இரவு திரையிடப்பட்டது. இதை பார்க்க ஏராளமானோர் தியேட்டரில் குவிந்தனர். அப்போது, சிறப்பு காட்சியை பார்க்க, முன்னறிவிப்பின்றி நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பொதுமக்கள், அவரை காண குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி, 35, என்ற பெண் உயிரிழந்தார். மேலும், அவரது 9 வயது மகன் காயமடைந்தார்.இது தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, உயிரிழந்த ரேவதி குடும்பத்தினருக்கு, நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி முறையிட்டார். இதை நிராகரித்த நீதிமன்றம், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அவரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் தரப்பில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் நேற்று இந்த உத்தரவு நீதிமன்றத்தில் இருந்து வராததால், சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக கோர்ட் உத்தரவு நகல் கிடைக்க பெற்றதை அடுத்து நடிகர் அல்லு அர்ஜூன் சஞ்சல்குடா சிறையில் இருந்து இன்று (டிச.14) காலை விடுவிக்கப்பட்டார்.

சட்டத்தை மதிக்கிறேன்!

சிறையில் இருந்து வெளியே வந்த பின், நடிகர் அல்லு அர்ஜூன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் சட்டத்தை மதிக்கிறேன். நடந்த சம்பவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை. நான் நலமாக இருக்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது தற்செயலான சம்பவம். வழக்கு குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

SUBRAMANIAN P
டிச 14, 2024 13:27

சினிமா நடிகர் நடிகைகளை ஏண்டா நேர்ல பாக்கணும்னு அலையுறீங்க.. உங்களுக்கு என்ன இருக்கோ அதுதானே அவனுக்கும், அவளுக்கும் இருக்கு.. எஸ்ட்ராவா எதாவது இருக்கா? லூசுப்பயலுகளா?


ram
டிச 14, 2024 10:44

இங்கேய தனியார் மருத்துவமனையில் ஏழு நபர்கள் இறந்து போய் இருக்கிறார்கள் அதைவிட்டு விட்டு ஆந்திர நடிகரை பத்தி கருத்து போடும் இந்த ஊபிஸ் என்ன சொல்லுவது. அங்கேய் நடப்பது காங்கிரஸ் கீழ்த்தரமான அரசியல். இங்கு ஒரு நடிகர் நடித்த முதல் காட்சியில் ஒரு இளைஞர் இறந்து போனாரே அப்போது இந்த திருட்டு திமுக அரசு அந்த நடிகரை கைது செய்தார்களா. இப்போது ஒரு கூத்தாடி கட்சி மாநாட்டில் சில நபர்கள் இருந்தார்களே அதற்கு அந்த கூத்தாடி நடிகரை கைது செய்ததா இந்த விடியாத திருட்டு திமுக அரசு.


Anand
டிச 14, 2024 10:35

அதாவது இந்த வழக்கு, நேற்று தொடங்கி நேற்றோடு முடிந்துவிட்டது....


AMLA ASOKAN
டிச 14, 2024 09:19

அல்லு அர்ஜுன் ஏன் சினிமா தியேட்டருக்கு சென்றார் ? தன்னை பார்க்க ஒரு பெரிய ரசிகர் கூட்டம் வரும் என தெரியாதா ? நம்ம விஜய் எப்படி நடந்து கொள்கிறார் ? இந்த விவகாரத்தில் ஒரு பெண் இறந்ததை காட்டிலும் இந்த நடிகன் மீது FIR பதியப்பட்டதற்கு இவ்வளவு வக்காலத்து விமர்சனம் . ஒரு நாள் சிறைக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம் . சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் .


மண்ணாந்தை
டிச 14, 2024 09:17

என்ன குற்றம். என்ன வழக்கு. என்ன ஜாமீன். என்ன நீதி. யாருக்கு எவ்வளவு தண்டனை


sankaranarayanan
டிச 14, 2024 08:55

உத்தரவு நீதிமன்றத்தில் இருந்து வராததால், சிறையில் அடைக்கப்பட்டார் என்று சொல்ல மாநில அரசுக்கு வெட்கமாக இல்லை நீதி மன்றமும் சிறைச்சாலையும் அதே மாநிலத்தில்தான் உள்ளன மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இவைகள் உள்ளன அப்படி இருந்தும் நீதி மன்ற உத்திரவு சிறைச்சாலைக்கு வரவில்லை என்றால் அதற்கு தாமதமாணவர்களைத்தான் அரசு தண்டிக்கவேண்டும் தவிர அல்லி அர்ஜுநாவை தண்டிக்காக்கூடாது நீதி மன்றமே முன் வந்து இதுபோன்ற வழக்குகளை நீதிமன்ற உத்திரவை சிறைச்சாலைக்கு கொண்டுசெல்ல யார் தாமம் செய்தார்கள் என்று விசாரித்து அவர்களைத்தான் தண்டிக்க வேண்டும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாகும் இந்த மாநில அரசின் தாமதத்தியினால் உலக பெயர் பெட்ற ஒரு நடிகரை ஒரு நாளாவது சிறைச்சாலையில் வைத்தோம் என்ற அவப்பெயருக்கு ஆளானதால் நீதி மன்றமே அந்த மாபெரும் உலக நடிகருக்கு மாநில அரசிடமிருந்து 25-லட்சமாவது மான நஷ்டஈடு கொடுக்கு ஆணை இடவேண்டும்


nv
டிச 14, 2024 08:44

Congress leader Priyanka yday blabbered about few odd atrocities and said about the failure of constitution? Can she condemn her stupid CM and her police on this mockery of constitution?? Shame on Congress


chennai sivakumar
டிச 14, 2024 08:42

அடுத்த எலக்சனில் அல்லு அர்ஜுன் நின்று காங்கிரஸை காணாமல் போக செய்திடுவார். வெயிட் அண்ட் watch


விவசாயி
டிச 14, 2024 08:13

சூப்பரப்பு. . உடனே சிறை... உடனே ஜாமின் சூப்பரப்பு இப்படித்தான் இருக்கணும் நாடு, இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே


Arun, Chennai
டிச 14, 2024 08:11

Justice is for sale or, Justice in auction - highest bidder gets justice instantly, isn't it?


புதிய வீடியோ