உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சி மாநாட்டுக்கு விக்கிரவாண்டி தயாராகிறது; செப்.,23ல் நடத்த ஏற்பாடு தீவிரம்!

விஜய் கட்சி மாநாட்டுக்கு விக்கிரவாண்டி தயாராகிறது; செப்.,23ல் நடத்த ஏற்பாடு தீவிரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: செப்டம்பர் 23ம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் நடத்தப்போவது உறுதியாகி உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் மாநாட்டு வேலைகளில் தீவிரமாகியுள்ளனர்.

ஆரம்பம்

கட்சி ஆரம்பிப்பேன், தேர்தலில் போட்டியிடுவேன் என்று யார் யாரோ கூறியது நடக்காது போனாலும், 'அரசியலுக்கு நிச்சயம் வருவேன்' என்று கூறி அதை செய்தும் காட்டி உள்ளார் நடிகர் விஜய். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைத்து வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்துவிட்டார்.

அவசியம்

கட்சி பெயர் அறிவிச்சாச்சு, கொடியையும் அறிமுகப்படுத்தியாச்சு, கட்சி பாடலையும் வெளியிட்டாச்சு. கொடி விளக்கம், கட்சியின் கொள்கை உள்ளிட்ட மற்ற நோக்கங்களை அறிவிக்க மாநாடு அவசியம் என்பதால் அதற்கான பரபர வேலைகளில் நடிகர் விஜய் இறங்கி வருகிறார். அதற்குள் அவர் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார், யார் சொல்லி கட்சியை ஆரம்பித்து இருக்கிறார், சீமானுடன் கூட்டணி என்று பலர் ஹேஷ்யங்களை கூறி வருகின்றனர்.

ஏதேனும் ஒரு இடம்

இத்தகைய சூழ்நிலையில், திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்ய விஜய் உத்தரவிட்டு இருந்ததாக கூறப்பட்டது. அங்கு இடம் அமையாத நிலையில், விக்கிரவாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது.தற்போது செப்டம்பர் 23ம் தேதி கட்சியின் முதல் மாநாடு என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிட்டது. மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடக்கிறது. முதல் மாநாடு; அனைத்தையும் கனகச்சிதமாக, எவ்வித சிக்கலும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்பதால் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட பலரும் அதீத கவனத்துடன் செயல்படுகின்றனர்.

எஸ்.பி.யிடம் மனு

மாநாட்டுக்கு அனுமதி கோரி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் முதல் நடவடிக்கையாக முறைப்படி மனு ஒன்றை புஸ்சி ஆனந்த் அளித்துள்ளார். அவர் மனு கொடுக்கச் சென்ற போது எஸ்.பி., அங்கு இல்லை. இதனால் ஏ.டி.எஸ்.பி., திருமாலிடம் மனு அளித்துள்ளார்.

85 ஏக்கர்

மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது; செப்டம்பர் 23ம் தேதி வி. சாலையில் உள்ள கிராமத்தில் மாநாடு நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வேண்டும். 85 ஏக்கரில் மாநாடு நடத்துவதற்கான இடமும், வலது,இடது புறங்களில் வாகனங்களில் நிறுத்துவதற்கான இடமும் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆலோசனைகள்

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் என்பது தற்போது விறுவிறுவென தொடங்கி உள்ளதால் கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பாகி உள்ளனர். மாவட்டம்தோறும் எத்தனை பேரை அழைத்து வருவது, எத்தனை வாகனங்கள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள், ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பது என ஆலோசனைகளை முழு வீச்சில் ஆரம்பித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M Ramachandran
ஆக 28, 2024 20:24

இந்த தமிழ்நாட்டு அரசியல் மற்றும் மக்களை இன்னும் அறிந்து கொள்ள வில்லை. பண பலம் அது சொந்த சம்பாத்யத்தை வைத்து பொது பணத்தை திசைய்ய திருப்பி அரசியல் செய்யும் திராவிட அரசியலை எதிர்த்து போட்டி போடுவது மிக கடினம். எல்லோருமே MGR போல் மக்கள் மனதில் நிற்க முடியாது. அது தெரிந்து ரஜினி சுதாரித்து கொண்டார். சிவாஜி கணேசன் சொந்த பணத்தையையும் செல்வாக்கையும் இழந்தார். தீ மு க்கா வின் பண பலம் கட்சி நிர்வாக தன்மை திரைப்பட உலக பலம் பத்திரிக்கையைகள் பலம் ஊடக பலத்தால் பொய்யை உண்மை போல் திரித்து எழுதி மக்களை ஏமாற்றி நம்பவைத்து அரசியல் செய்வது மிக கடினம். இந்த உண்மையயை உணர வேண்டும்


தாமரை மலர்கிறது
ஆக 28, 2024 18:52

திராவிட ஓட்டுக்களை பிரிக்க, அமித் ஷா இயக்கும் படம் தான் தமிழக வெற்றி கழகம். விஜய் அற்புதமாக நடித்து வருகிறார். விரைவில் படம் சக்கைபோடு போடும் என்பதில் சந்தேகம் இல்லை. ரெண்டு ஆண்டுகளுக்கு முன் ஜீப்பில் ஏற்றி ஒரு ரைடு தான் அமித் ஷா விட்டார். எந்த சம்பளமும் இன்றி படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டுவிட்டார். இனி ஸ்டாலின் ஆட்டம் காலி. அடுத்து ஆட்சி அமைக்கப்போவது பிஜேபி தான்.


Mr Krish Tamilnadu
ஆக 28, 2024 16:35

சினிமாவில் தான் கதை திருட்டு, பிறர் பதிவு செய்த டைட்டிலை பயன்படுத்தி அனுமதி வாங்குவது, நல்ல கதைகளில் ரீமேக் படம் நடிப்பது எல்லாம் சாதாரணம். ஆனால் அரசியல், மக்கள் தொண்டு அப்படி அல்ல. ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு அடியும் கவனமாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். நல்லது செய்ய வேண்டும் என்ற மனதுக்காக ரொம்ப நாள் மன்னித்து ஏற்று கொள்ள மாட்டார்கள். இதையே ஒழுங்க செய்ய தெரியவில்லை. கூட இருப்பார்களும் விவேகமானவர்கள் இல்லை என சந்தேகம் வர ஆரம்பித்து விட்டால், கேள்வி குறி தான் மிஞ்சும்????????????.வெற்றிக்கு பல படிகள். ஒவ்வொரு படியும் கவனம் தேவை.த. வெ. க.


Ms Mahadevan Mahadevan
ஆக 28, 2024 15:29

எல்லாம் சரிதான் விஜய்காந்த் மாதிரி தனித்து போட்டி இட்டு தன் கட்சி பலத்தை காண்பிக்க வேண்டும் . எடுத்தவுடனே கூட்டணி அமைத்து அரசு அமைக்கலாம் என்று கனவு கானவெண்டாம். மதுவிலக்கு, சம வாய்ப்பு, சம உரிமை, நல்ல மருத்துவம் , குடிநீர், சாலை, தரமான கல்வி தருவேன் என்று உறுதி தந்தால் மக்கள் வாய்ப்பு தருவார்கள்


Palanisamy Sekar
ஆக 28, 2024 14:59

விஜயை திமுகவினருக்கு அவர்களது கூட்டணி கட்சியினரும் சகட்டுமேனிக்கு விமர்சிப்பது சரியல்ல. ரிட்டையர் ஆகவேண்டிய வயதில் நடித்து பணபோபியா வியாதியில் இருப்பவர்களை காட்டிலும், நல்ல சம்பாதிக்கும் தருணத்தில் அதனையெல்லாம் விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய துணிவாக வந்ததற்க்கே ஒரு பிக் சல்யூட் அடிக்கலாம். வாய்ப்பு கொடுங்கள். அவரது மாநாட்டில் அவர் என்னமாதிரி விளக்கம் கொடுக்கப்போகிறார் என்று காத்திருந்து பின்னர் விமர்சியுங்கள். கடுப்போடு சகட்டுமேனிக்கு விமர்சிப்பது சரியல்ல. அதே சமயம் விஜயோடு கூட்டணி சேர அதிமுகவும் சீமானும் வழிமேல் விழிவைத்து மூச்சுவிட அரசியலில் பிழைக்க காத்திருக்கின்றார்கள். விசிக முதல் திமுகவின் கூட்டணியினர் ஏன் பதற்றம் அடைகின்றார்கள் என்றே தெரியவில்லை. அண்ணாமலை போல வாழ்த்து சொல்லி காத்திருங்களேன் அவரது செயல்பாடுகளை விமர்சிக்க. எப்படியாயினும் விஜயின் இந்த துணிச்சலான முடிவுக்காக அவரை பாராட்டலாம். போதும் என்கிற மனதோடு பணத்தை சம்பாதிக்க தள்ளாத வயதிலும் தடுமாறுகின்ற இந்த காலத்தில் நூற்றுக்கணக்கான கோடி சம்பாதிப்பதை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய வந்த அவரது நல்ல உள்ளத்துக்கு சபாஷ் சொல்வோம். புதியவர்கள், இளைஞர்கள், எக்ஸ் எம் எல் ஏக்கள் எம்பிக்கள் இல்லை. முற்றிலும் புதியவர்கள் மாநில தலைவரை தவிர அனைவரும் புதியவர்கள். பார்ப்போம் அவர்களின் நோக்கத்தை, செயல்பாட்டினை, அதே சமயம் வாழ்த்துக்களையும் சொல்வோம். தேசப்பற்றோடு செயல்பட வாழ்த்துவோம்


BHARATH
ஆக 28, 2024 16:15

எண்ணத்தை வாய்ப்பு தராது வென்னும்நா ஆப்பு தரும்.. இவன் யாரு எப்படி பட்டவன். இவனால் ரோட்டுக்கு வந்த தயாரிப்பாளர்கள் எவ்ளோ பேரன்னு லிஸ்ட் இருக்கு.


Lesly Loyans
ஆக 28, 2024 14:42

தன்னுடைய மகனை முதல்வர் ஆக்கி அழகு பார்க்க நினைக்கும் SAC யின் கனவை நிறைவேற்ற, தன் மகன் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற தங்கள் பெற்றோர்களின் கனவை சிதைத்து விஜய்க்காக தங்கள் எதிர்காலத்தை தொலைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் நமது இளைஞர்கள்


சமீபத்திய செய்தி