உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோறு இல்லியாமே வர்கீசு...! த.வெ.க. மாநாட்டின் லேட்டஸ்ட் அப்டேட்

சோறு இல்லியாமே வர்கீசு...! த.வெ.க. மாநாட்டின் லேட்டஸ்ட் அப்டேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: த.வெ.க., மாநாட்டில் தொண்டர்களுக்கு உணவு வழங்கப்படாது என்று புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளார் நடிகர் விஜய். தமது கட்சியின் முதல் மாநாட்டை வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்துகிறார்.கட்சியின் கொள்கை, இலக்குகளை முன் வைக்கும் திருவிழாவாக இம்மாநாடு இருக்க வேண்டும் என்று விஜய் ஏற்கனவே கூறி இருக்கிறார். மாநாட்டுக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடு பணிகள் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளன.மொத்தம் 27 குழுக்களின் உதவி மற்றும் வழிகாட்டுதலுடன் மாநாட்டு பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. எப்படியும் 5 லட்சம் பேர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 50 ஆயிரம் இருக்கைகளே போடப்பட்டுள்ளன. அதற்கு மேல் வருபவர்கள், நின்று கொண்டே மாநாட்டை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநாட்டு மேடையில் நடிகர் விஜய் நடந்து சென்று (ramp walk) தொண்டர்களை பார்க்கும் வகையில் 800 மீட்டர் தூரத்துக்கு நடைமேடை அமைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத மாநாட்டு ஏற்பாடு பணிகள் முடிந்துவிட்டன.இப்படி ஏகப்பட்ட சிறப்பு அம்சங்கள் இருக்கும் நிலையில் வரக்கூடிய தொண்டர்களுக்கு உணவு உபசரிப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுபற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு வழங்குவதை கட்சி நிர்வாகம் தவிர்த்து உள்ளதாக தொண்டர்கள் கூறுகின்றனர்.அதற்கான வலுவான காரணமும் முன் வைக்கப்படுகிறது. அதாவது கடந்த ஆண்டு மதுரை அ.தி.மு.க., பொன்விழா மாநாட்டின் போது டன் கணக்கில் உணவு வீணானது. தொண்டர்கள் மத்தியில் இந்த விவகாரம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, பொன்விழா மாநாடு பற்றிய செய்திகள் இந்த உணவு வீணான விவகாரத்தில் மக்களிடம் எடுபடாமல் போய்விட்டதாக விஜய் தரப்பில் நினைக்கின்றனர்.எந்த வகையிலும் அப்படி ஒரு நெகட்டிவ் விஷயம் தமது கட்சி மாநாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தொண்டர்களுக்கு உணவு வழங்குவது இம்முறை தவிர்க்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தொண்டர்களுக்கு அந்தந்த மாவட்டத்தின் தற்காலிக பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் உணவுகளை ஏற்பாடு செய்து கொள்ளவும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாம்.அதன்படி, விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான ஓட்டல்களில் இப்போது உணவுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. உணவு வீண் ஆகக்கூடாது என்பது நல்ல எண்ணம் தான். அதற்காக மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு கட்சி சார்பில் உணவு ஏற்பாடு செய்யாமல் இருப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்ற புகைச்சலும் ஒரு சிலர் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், 'மாநாடு தான் முக்கியம், சோறா முக்கியம்' என்று கேட்கும் தீவிர ரசிகர்களும் நிறையப்பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதே தற்போதுள்ள நிலவரம்....!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

muthu
அக் 27, 2024 13:01

Lot of political workers are expecting food water etc and not providing this will reduce participation of workers . Better Vijay do his function through Press meet . Wastage of food can be avoided by pre booking . Stay in the party for food No food No Stay


Ravi P
அக் 26, 2024 19:13

சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? சொல்லுங்கண்ணே.


Ravi Shankar
அக் 26, 2024 09:32

Good Decision, Mr Vijay. Your attempt to prove the media and TN Politicians that Tamilnadu youth will assemble for common cause, even if there is no Briyani or Quarter bottle. I strongly welcome this decision. Even if the conference is attended by 50,000 people without any food or bottle arrangements, this itself great success and leap of new leaf in TN POLITICS ARENA. All the best.


Praveen
அக் 26, 2024 08:38

சிக்கனமாக கட்சியை நடத்துவார் போல தெரிகிறது


Venkatesh
அக் 26, 2024 07:19

அது ஒரு பிரபலமான சினிமா வசனம்...... அதனால் அந்த தலைப்பு..... அது தெரியாம மத போதனை.....


Sivakumar
அக் 25, 2024 21:47

அது ஏன் வர்கீசு ? ஒரு ஷ்ரேயஸ் , ஒரு ரமேசு ஒரு சுரேசு


kantharvan
அக் 25, 2024 22:54

ஒண்ணுமில்லீங்க மதத்தை மட்டுமே வைத்து அரசியல் செய்ததனால் மறை கழண்டு போன நிருபாஸ் ஜாஸ்தி இங்கே அதான் நண்பா


V GOPALAN
அக் 25, 2024 21:37

பிச்சைக்கார தமிழர்கள் அதிர்ச்கடசாலிகள் மாதம் ஒரு மாநாடு 12 பொலிடிகல் பார்ட்டிஸ். பணம் பாட்டில் சாப்பாட்டுடன் ஒரு மாதம் ஓட்டிவிடலாம். வேலை செய்வதற்கு பானி பூரிக்கல் இருக்கும்போது கவலை வேண்டாம்


Jay
அக் 25, 2024 21:20

இந்த ஐடியா நல்லா இருக்கு. சரக்கு + பிரியாணி, குவார்ட்டர், கேபேரே டான்ஸ்னு ஆசையை தூண்டாமல் நடத்துவது வரவேற்க தக்கது.


V GOPALAN
அக் 25, 2024 21:09

யாருடைய காசு அதையும் எழுதினால் நல்லது . கருப்பு பணம் விளையாடுகிறது . நம்மை போன்ற பன்றி கூட்டம் ஓசி உணவுக்கும் பணத்திற்கும் அலைகிறது


சாண்டில்யன்
அக் 25, 2024 23:26

கொஞ்சம் நாசூக்கா வராஹி கூட்டம்னு சொல்லப்படாதா


தமிழன்
அக் 25, 2024 21:09

விஜய் அவர்கள் கவனத்திற்கு... 1 மாநாட்டுக்கு வருபவர்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும். அப்போது தான் எத்தனை பேர் வந்தார்கள் என்ற கணக்கு கிடைக்கும். இந்த கட்டண தொகையை அவர்கள் திரும்பி செல்லும் போது திருப்பி கொடுத்து விடலாம். இப்படி செய்வதால் கடைசி வரை தொண்டர்களை மாநாட்டில் இருக்க வைக்க முடியும். கடைசி வரை இருந்தவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கு கிடைக்கும். 2 நுழைவுக்கு ஒரு சில கேட் இருப்பது போல வெளியேற எக்ஸிட் கேட் நிறைய அமைக்க வேண்டும். 3 ஒரு QR ஸ்கேன் செய்து அவர்கள் வருகையை உறுதி செய்து கொள்ள சொன்னால் வருவதற்கு விரும்பியவர்கள் எத்தனை பேர் அதில் வந்தவர்கள் எத்தனை பேர் என்பது தெளிவாக கிடைக்கும். இதனால் மக்கள் ஆதரவு கணக்கீடு செய்து கொண்டு அதனை ஓட்டாக மாற்றிக் கொள்ளலாம். 4 வாழ்த்து தெரிவிப்பவர்களுக்கு தனியாக சோசியல் மீடியாவில் பக்கம் ஒதுக்கலாம். சிலர் பெயரை வெளியே காட்ட விரும்பாமல் வாழ்த்து சொல்ல தயங்குவார்கள். அதனால் அவர்களுக்காக தனியாக QR வைத்து வாழ்த்துக்களை பெறலாம். இதனால் எதிர் கட்சி தோழர்களும் வாழ்த்து சொல்லலாம். மொத்த வாழ்த்தை வைத்து இவரின் மக்கள் செல்வாக்கு, அதில் எத்தனை ஓட்டாக மாறும் என்பது போல ஒரு கணக்கு போட்டு வைக்கலாம். 5 இது போல சொல்ல இன்னும் 51 செய்திகள் இருக்கிறது விருப்பம் இருந்தால் ஒரு சமிஞை செய்தால், தொடர்ந்து சொல்கிறோம்.


krishna
அக் 25, 2024 22:09

EERA VENGAAYAM THAMIZHAN AAHA PERIYA ARIVU JEEVI ENA NINAIPPA.IPPADI EDHAAVADHU ULARAADHU.UNGALAI 200 ROOVAA OOPIS CLUB DISMISS SEIDHU VIDA POGIRAARGAL.IDHA UN GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI KUMBAL THALA VENUGOPAL PAARTHAAL 200 ROOVAA COOLIE STOP AAYIDUM.


தமிழன்
அக் 25, 2024 23:50

அட நீங்க வேற.. இப்போ 200 ரூபாய் வருவதில்லை.. அதான் எல்லோரும் same side goal போட்டுக்கிட்டு இருக்காங்க.. அமைச்சர் உதயநிதியை மாட்டி விட வேண்டும் என்பதற்காகவே வேண்டும் என்றே தவறாக பாடிய தமிழ் தாய் வாழ்த்து ஒரு உதாரணம்.. இது போல நிரைய இருக்கு.. இன்னுமா அந்த 200 ரூபாயை நம்பிக்கிட்டு இருக்கீங்க..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை