உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டு கடனில் ரூ.7 கோடி பாக்கி நடிகர் பங்களாவுக்கு ஜப்தி நோட்டீஸ்

வீட்டு கடனில் ரூ.7 கோடி பாக்கி நடிகர் பங்களாவுக்கு ஜப்தி நோட்டீஸ்

சென்னை:நடிகர் ரவி மோகன் பங்களாவை ஜப்தி செய்ய, தனியார் வங்கி சார்பில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் ரவி மோகனுக்கும், சினிமா பட தயாரிப்பாளர் மகள் ஆர்த்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சென்னை ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் வசித்து வந்தனர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக, கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே, ரவியும், ஆர்த்தியும் வசித்த வந்த பங்களாவை, தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்று வாங்கி உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இந்த பங்களாவை விட்டு ஓராண்டுக்கு முன்பே வெளியேறிய ரவி, வாடகை வீட்டில் குடியேறி விட்டார். மேலும், வங்கி கடனுக்கான தவணை, 7 கோடி ரூபாய்க்கு மேல் கட்டவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, ரவி மோகன் பங்களா முகவரிக்கு, தனியார் வங்கி சார்பில் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. அதை அவர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ரவி மோகனின் பங்களாவை ஜப்தி செய்ய, தனியார் வங்கி சார்பில் நேற்று 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டு உள்ளது. இந்த பங்களாவுக்கு ரவி மோகன் வருவது இல்லை என்பதால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரின் அலுவலகத்திலும் நோட்டீஸ் ஒட்ட இரு ப்பதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
செப் 25, 2025 01:52

சோனிமாவில் வில்லன் பாத்திரத்தில் நடித்தவர்கள் அநேகம்பேர் நிஜ வாழ்க்கையில் நேர்மையாக வ வாழ்ந்துள்ளனர். ஆனால், ஹீரோ பாத்திரத்தில் நடித்தவர்கள் பலபேர் தகாத வேலைகள் செய்து அவர்கள் நிஜ வாழ்க்கையில் வில்லன்களாக வாழ்கின்றனர். ஒரே ஒரு உதாரணம்: அந்தக்காலத்து வில்லன் நடிகர் நம்பியார். நான் அவர் படத்தை பார்க்கும்போது மிகவும் பயந்துவிடுவேன். அந்த அளவுக்கு வில்லன் அவர் படத்தில். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு பெரிய ஆன்மீகவாதி. நூறு முறைக்கு மேல் கேரளாவில் உள்ள புனித சபரிமலைக்கு யாத்திரை சென்றவர். அவர் ஒரு பெரிய ஐயப்ப பக்தர்.


Ramesh Sargam
செப் 25, 2025 01:47

பட வாய்ப்புக்கள் இருந்தபோது நன்றாக ஆட்டம். இப்பொழுது பட வாய்ப்புக்கள் குறைந்தபிறகு, கடனிலிருந்து தப்பிக்க ஓட்டம். இதெல்லாம் ஒரு பொழப்பா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை