உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜோய்ஆலுக்காஸ் விளம்பர துாதராக நடிகை சமந்தா நியமனம்

ஜோய்ஆலுக்காஸ் விளம்பர துாதராக நடிகை சமந்தா நியமனம்

சென்னை: ஜோய்ஆலுக்காஸ் ஜுவல்லரியின் விளம்பர துாதராக, நடிகை சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, ஜோய்ஆலுக்காஸ் ஜுவல்லரி குழும தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது: நாட்டின் முன்னணி நகை கடையான, ஜோய்ஆலுக்காஸ் ஜுவல்லரி, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய டிசைன்களில், சர்வதேச தரத்தில், தங்க, வைர நகைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. உலக முழுதும் உள்ள, நகை ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில், எங்கள் பயணத்தில், நடிகை சமந்தாவை வரவேற்பதில் பெருமை அடைகிறோம். நகைகளின் வழியாக, வாழ்வின் அழகிய தருணங்களை கொண்டாடும், எங்களின் தத்துவத்துடன், அவரது குணநலன்கள் ஆழமாக பொருந்தும். இதனால் உலக சந்தைகளில், எங்கள் பிராண்டின் நிலை மேலும் வலுப்படும். இவ்வாறு அவர் கூறினார். நடிகை சமந்தா கூறுகையில், ''நகை எப்போதும், நான் யார் என்பதற்கான தனிப்பட்ட வெளிப்பாடாக இருக்கிறது. உள்ளார்ந்த அழகுடன், பெண்கள் தன்னம்பிக்கையோடு பிரகாசிக்க வேண்டும் என்பதை கொண்டாடும், இந்த பிராண்டுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை