உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 வருஷமா எதுவும் நடக்கல... அதானி விவகாரம்; செந்தில் பாலாஜி மறுப்பு

3 வருஷமா எதுவும் நடக்கல... அதானி விவகாரம்; செந்தில் பாலாஜி மறுப்பு

சென்னை: அதானி முறைகேடு விவகாரத்தில் தி.மு.க., அரசுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். சூரிய ஓளி மின்சார ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபர் அதானி 25 கோடி டாலர்கள் லஞ்சமாக கொடுத்து இருப்பதாகவும், அதனை மறைத்து அமெரிக்க முதலீடுகளைப் பெற்று மிகப்பெரிய மோசடியை செய்திருப்பதாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால், அதானியை கைது செய்ய வேண்டும் என்றும், பார்லிமென்ட் கூட்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால், மின் ஒப்பந்த விவகாரத்தில் தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசுக்கும், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா (ஜெகன்மோகன் அரசு) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் தொடர்பிருப்பதாக பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.,வின் இந்தக் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். 'கடந்த 3 ஆண்டுகளில் அதானி குழுமத்துடன் தமிழக அரசு எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. மின்வாரியம் எந்தவித ஒப்பந்தத்தையும் போடவில்லை. தவறான கருத்துக்களை சிலர் பதிவிட்டு வருகின்றனர்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

shyamnats
நவ 22, 2024 08:10

ஜாமீனில் வெளியே இருப்பவர்கள், மற்றும் குடும்பத்தார் தான் - ராவுல் வின்சி, சோனியா காந்தி , செந்தில் பாலாஜி போன்றோர் - மிக அதிகமாக சப்தம் எழுப்பி கொண்டு இருக்கிறார்கள்.


Ramesh Sargam
நவ 21, 2024 20:11

சிறையிலிருந்து வந்து கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த செந்திலுக்கு கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது. மறுப்பு எல்லாம் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார். இன்னும் அவர் சம்பந்தப்பட்ட வழக்கு முடியவில்லை என்று நினைக்கிறேன். அவர் நிரபராதி என்று நீதிமன்றம் இன்னும் அறிவிக்கவில்லை என்று நினைக்கிறேன். இதை செந்தில் புரிந்துகொண்டு, அவர் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டும்.


pv
நவ 21, 2024 18:02

அமெரிக்க மேல கேஸ் போடுங்க


ஆரூர் ரங்
நவ 21, 2024 14:34

குற்றம் சாட்டியது அமெரிக்க அரசு. நடந்த காலத்தில் இவர் சிறையில்தான் இருந்தார். யாருக்கு முட்டு?.


முக்கிய வீடியோ