கூடுதலாக பொக்லைன் இயந்திரங்கள்: நீர்வளத்துறை நடவடிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் கூடுதலாக பொக்லைன் இயந்திரங்களை நிலை நிறுத்த, நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.அடையாறு, கூவம், பக்கிங்காம், கொசஸ்தலை ஆறு நீர்வழித்தடங்களில், ஏற்கனவே 30 பொக்லைன் இயந்திரங்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கூடுதலாக 10 இயந்திரங்களை, இங்கு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆற்றில், நீரின் அளவு அதிகரித்தால், அவற்றை விரைவாக வெளியேற்றும் வகையில், பொக்லைன்களை அங்கு நிலைநிறுத்த உள்ளதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளது. மேலும், 2 செயற்பொறியாளர்கள், 8 உதவி செயற்பொறியாளர்கள், 23 உதவி பொறியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.