உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு

மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடாக, ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7wo7m9v9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி, தனது விசாரணை அறிக்கையை ஐகோர்ட் மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூலை 22) அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பான வழக்கு, ஐகோர்ட் மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:* முக்கிய சாட்சிகளுக்கு பாதுகாப்பு கோரி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஏழு நாட்களில் முடிவெடுக்க வேண்டும். * பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வழங்கிய 7.5 லட்சம் இடைக்கால இழப்பீடு போதுமானதல்ல. கூடுதலாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். * விசாரணையில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Keshavan.J
ஜூலை 22, 2025 19:38

செத்தும் கொடுத்தான் சிதாகாதி என்று ஒரு பழமொழி உண்டு. அஜித்குமார் இறந்து அதை நிரூபித்துள்ளார். அவர் ஆத்மா ஷாந்தி அடையட்டும்.


sankaranarayanan
ஜூலை 22, 2025 19:14

ஆனால் அந்த பெண்மணி நிகிதா சொன்னபடி அவரது காரில் நகைகளை அவர் வைத்தாரா என்ற கேள்விக்கு ஊர்ஜிதமாக இன்றுவரை எந்த பதிலும் வரவில்லை நீதி மன்றமும் அதை குடைந்து கேட்கவும் இல்லை அதில்தான் மர்மமே இருக்கிறது ஏனென்றால் காரில் நகை ஒன்றுமே வைக்கவில்லை இது முழுக்க முழுக்க பொய்யிலேயே நிகேதாவால் ஜோடனை செய்து சித்தரிக்கப்பட்டு அரசு அதிகாரிகளினால் உதவியினால் சித்தரிக்கப்பட்ட வழக்காகும்


D.Ambujavalli
ஜூலை 22, 2025 16:40

அந்த ஐந்து போலீஸ் ஆட்களும் அந்தத் தொகையைக் கொடுக்குமாறு செய்ய வேண்டும். இதையே முன்னுதாரணமாகக்கொண்டு ஏற்கெனவே நிகழ்ந்த / நிகழ வாய்ப்புள்ள லாக்கப் மரணங்களுக்கெல்லாம்/ வரிப்பணம் போய்க்கொண்டிருந்தால் மக்களுக்கு என்ன நலம் செய்ய முடியும்?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 22, 2025 16:08

இழப்பீடு தொகையை அதிகமாக்கி கொண்டே செல்வதை பார்த்தால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து சாட்சிகளை கலைக்க நடக்கும் செயலோ என்று எண்ணத் தோன்றுகிறது. கோர்ட் மூலம் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.


vadivelu
ஜூலை 22, 2025 14:32

கொலை செய்தவர்கள் அல்லவா கொடுக்க வேண்டும் , ஏன் அரசு மக்களின் வரி பணத்தில் இருந்து கொடுக்கணும்.


GMM
ஜூலை 22, 2025 14:00

இழப்பீடு 25 லட்சம் மாத தேவைக்கு தகுந்தார் போல் பணம் வருமாறு ஏற்பாடு செய்து கொடுக்கவும். இழப்பை சம்பந்தப்பட்ட போலீஸ் அலுவலர்கள் சம்பளம் மற்றும் இதர படிகளில் பிடித்தம் செய்யவும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை