விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்
சென்னை:இரண்டு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கி, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில், இரு மார்க்கத்திலும் இனி சிதம்பரத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். திருச்செந்துார் - எழும்பூர் விரைவு ரயில் இரு மார்க்கத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் பூதலுாரில் ஒரு நிமிடம் நின்று செல்லும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.