உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 14, 16ம் தேதிகளில் பத்திர பதிவுக்கு கூடுதல் டோக்கன்

14, 16ம் தேதிகளில் பத்திர பதிவுக்கு கூடுதல் டோக்கன்

சென்னை:'ஆனி மாத முகூர்த்த நாட்களான நாளையும், 16ம் தேதியும், பத்திர பதிவுக்கு கூடுதல் 'டோக்கன்'கள் வழங்கப்படும்' என, பதிவுத் துறை அறிவித்துள்ளது. பொதுவாக முகூர்த்த நாட்களில், சொத்து வாங்குவது உள்ளிட்ட பத்திரங்களை பதிய, மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், ஆனி மாதம் முடிவடைய உள்ள நிலையில், நாளையும், 16ம் தேதியும் முகூர்த்த நாட்களாக உள்ளன.இந்த நாட்களில், பத்திரங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவுக்கு தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த இரண்டு நாட்களிலும், வழக்கமாக, 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், 150; வழக்கமாக, 200 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 வழங்கப்படும் என, பதிவுத் துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை