பத்திர பதிவுக்கு கூடுதல் டோக்கன்
சென்னை: முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஐப்பசி மாத முகூர்த்த நாட்கள் என்ற அடிப்படையில் நாளையும், 27ம் தேதியும், வழக்கமான 100 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில் 150; 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும் என, பதிவுத் துறை ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.