உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., (ஆயுதப்படை பிரிவு) ஜெயராமை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=38w5wstd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கத்துடன், காதலனின் தம்பியான சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன்மூர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு, திருவள்ளூர் எஸ்.பி., தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் (14ம் தேதி) சென்றனர். அப்போது, அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் திரண்டு போலீசாருக்கு இடையூறு செய்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகிவிட்டார். இதனிடையே இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி ஐகோர்ட்டில் முன் ஜாமின் கோரியிருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பூவை ஜெகன் மூர்த்தி மட்டுமின்றி ஆயுதப்படைப்பிரிவு ஏ.டி.ஜி.பி., ஜெயராமிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதும் சந்தேகம் உள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து ஏ.டி.ஜி.பி., ஜெயராம், எம்.எல்.ஏ., ஜெகன் மூர்த்தி இருவரும் இன்று மதியம் 2:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அதன்படி இருவரும் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர்.வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க உத்தரவிட்டார்.கிடுக்கிப்பிடி கேள்விதொடர்ந்து எம்.எல்.ஏ., பூவை ஜெகன் மூர்த்திக்கு கடுமையான கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.இந்த வழக்கு விசாரணையில், 200க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம். நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்.விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள். விசாரணைக்கு தனியாக வர வேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்யவா உங்களை மக்கள் ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்று நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.இந்த வழக்கு ஜூன் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டநிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.யார் இந்த ஜெயராம் போலீஸ் ஏ.டி.ஜி.பி., (ஆயுதப்படை பிரிவு) ஆக இருக்கும் எச்.எம்.ஜெயராம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். கோவையில் பணியை தொடங்கிய அவர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.பி.,யாகவும், கோவை, வேலுார், தஞ்சையில் டி.ஐ.ஜி., ஆகவும், திருச்சியில் ஐ.ஜி., ஆகவும் பணியாற்றியவர். சென்னை வடக்கு கூடுதல் கமிஷனராகவும், தமிழ்நாடு போலீஸ் அகாடமியிலும் பணியாற்றியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

S SRINIVASAN
ஜூன் 16, 2025 21:18

திராவிட மாடல் ஆச்சி? விடியா ஆச்சி? எது சரி? சொல்லுங்கண்ணே சொல்லுங்க.


K.n. Dhasarathan
ஜூன் 16, 2025 21:04

A.D.G.P. ஜெயராம் அந்த பதவிக்கு சற்றும் பொருத்தமில்லாத செயல்களை செய்துள்ளதால், அவரை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும், சும்மா செங்கல்பட்டுக்கு இட மாற்றம் செய்கிறேன் என்கிற பம்மாத்து வேலைகள் வேண்டாம், மற்றவர்களுக்கு ஒரு பயம் வரவேண்டாமா ? என்ன தப்பு வேணாலும் செய்யலாம், அதான் போலீஸ் வேலை இருக்கே என்கிற மனோபாவம் இன்றைய போலீசுக்கு வர கூடாது.


GMM
ஜூன் 16, 2025 20:32

குற்றம் குறைய காதல் திருமணம் பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என்ற சட்ட திருத்தம் தேவை . அரசு பராமரிப்பில் வளரும் பிள்ளைக்கு தேவையில்லை. விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது சரியா.? அரசு நிர்வாக பணி என்ன ? உள்துறை அனுமதி இல்லாமல் போலீஸ் கைது உத்தரவு ஒரு எல்லை மீறிய செயல். தேர்தல் ஆணையம் ஒப்புதல் பெற்று ஜெகன் கைது செய்து இருக்க வேண்டும். நீதி மன்ற நிர்வாக முறை சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 16, 2025 20:07

அரசியல்வாதிகள் என்றால் நீதிமன்றங்களையே, நீதிபதிகளையே மிரட்டலாம் என்று நினைக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் என்றால் என்னவென்று நீதிபதிகள் தக்க பாடம் புகட்டவேண்டும்.


Murugesan
ஜூன் 16, 2025 19:45

திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில இன்னும் நிறைய வரும், காவல்துறையை திமுக அயோக்கியனுங்களுக்காக சீரழித்த காவல்துறை தலைவர்


நசி
ஜூன் 16, 2025 19:30

பாராட்டப்பட வேண்டிய கரு சினிமாவுக்கு கிடைத்தது.ஏடிடிஜிபி உள்துறை அமைச்சர் முதலமைச்சரின் கீழ் வருபவர் ஏன் அவரை கோர்ட் கைது செய்ய சொல்லவில்லை


SRIRAM
ஜூன் 16, 2025 18:30

துரு பிடிச்ச இரும்பு கரம்.....


KRISHNAN R
ஜூன் 16, 2025 18:21

என்ன ஒன்னும் புரிய வில்லை...


Kumar
ஜூன் 16, 2025 18:15

விடியல் பிரகாசம்


Manaimaran
ஜூன் 16, 2025 17:33

M.L.A வை ஏன் கைது செய்யல ப.... மா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை