உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

நடிகர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா, த.வெ.க., தலைவர் விஜய்யை, இன்று சந்தித்து பேசியுள்ளார். விஜய் கட்சியில் அவர் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் விஜய்யின் த.வெ.க.,தொடங்கி ஓராண்டை எட்ட உள்ள நிலையில், கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகளை நிரப்புவதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் ஆட்சியில் சம பங்கு எனப் பேசியதைத் தொடர்ந்து, அவரது கருத்தை வி.சி.க.,வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா வரவேற்றார். கட்சித்தலைமையின் எண்ணத்துக்கு மாறாக, தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தார்.இதனால், தி.மு.க., மற்றும் வி.சி.க., இடையே மோதல் சூழல் உருவானதை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் த.வெ.க.,வில் இணைய இருப்பதாகவும் சொல்லப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2xqwwzga&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், த.வெ.க., தலைவர் விஜய்யை, அவரது பனையூர் அலுவலகத்தில் இன்று ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் மூலம் அவர் த.வெ.க.,வில் இணைய இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இது தொடர்பாக விஜய் ஓரிரு நாட்களில் அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. த.வெ.க.,வின் தேர்தல் பணிகளை ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனத்திற்கு வழங்க விஜய் முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியே வந்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்.ஆதவ் அர்ஜூனா யார்பிரபல லாட்டரி நிறுவன உரிமையாளர் மார்ட்டினின் மருமகன் தான் இந்த ஆதவ் அர்ஜூனா. மார்ட்டின் மகளை திருமணம் செய்துள்ளார். விளையாட்டு அமைப்பு ஒன்றில் பொறுப்பு வகிக்கிறார். தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

மோகனசுந்தரம் லண்டன்
ஜன 30, 2025 13:04

வாழ்த்துகிறேன்


நிக்கோல்தாம்சன்
ஜன 30, 2025 04:56

விஜய் போன்றவர்களின் சொல்பேச்சு தலைமையை ஆதவ் கேட்டு நடக்க வேண்டும் என்பது தான் காலத்தின் கோலம் , ஆனால் ஆதவ் உதவிய சொல்பேச்சு சர்வாதிகாரியினால் இன்று தமிழக பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு ஆதவ் தான் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்கவேண்டும்


karupanasamy
ஜன 30, 2025 03:03

இந்த செய்தியை படித்துவிட்டு என்னுடைய தாத்தா அடித்த கமெண்ட் திருமாவிற்கு எப்போதுமே பல்லு உடைந்தாலும் பரவாயில்லை நிலைமைதான் என்று சொன்னார். இதற்க்கு அர்த்தம் என்ன என்று கேட்டேன் எதுவும் சொல்லாமல் நகர்ந்து விட்டார்.


BHARATH
ஜன 30, 2025 00:57

பல குடும்பத்தை தெருவில் நிறுத்தின லாட்டரிகாரனும் பல தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிற்கவைத்தவனும் சேர்ந்தா ரசிகனுங்க நடுதெர்ல நிக்கணும்.


Venkatesan.v
ஜன 30, 2025 00:39

நம்ம ஹெச். ராஜா அண்ணா சொல்வதுபோல.. கிரிப்டோ எல்லாம் ஒன்னுகூடுது.....


BalaG
ஜன 30, 2025 00:13

விஜய், உஷாரையா உஷார்..


முருகன்
ஜன 29, 2025 22:25

கடைசியில் பூனை குட்டி வெளியே வந்து விட்டது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 29, 2025 20:40

பேசுனதுக்கெல்லாம் .நன்றிங்ண்ணா ....


தாமரை மலர்கிறது
ஜன 29, 2025 19:59

ஆதவ் அர்ஜுனா அமித் ஷாவால் அமர்த்தப்பட்ட மனிதர் தான். விஜய் கட்சி முழுமையாக பிஜேபி கட்டுப்பாட்டுக்குள் இனி வரும்.


ராமகிருஷ்ணன்
ஜன 29, 2025 19:47

இதை குருமா கட்சியின் பின்னடைவு என்று தான் பார்க்க வேண்டும். காசுக்கு வேலை செய்யும் கூட்டம் இடம் மாறலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை