உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமா மீது நடவடிக்கை எடுக்க மறுப்பு; பார் கவுன்சிலுக்கு நிர்வாகி எதிர்ப்பு

திருமா மீது நடவடிக்கை எடுக்க மறுப்பு; பார் கவுன்சிலுக்கு நிர்வாகி எதிர்ப்பு

சென்னை :

தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இணை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கை:

சென் னை உயர் நீதிமன்றம் அருகே, சில தினங்களுக்கு முன், ராஜிவ் காந்தி என்ற வழக்கறிஞரின் டூ - வீலர் வாகனம் மீது, திருமாவளவன் கார் மோதியது. இவ்விவகாரத்தில், வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை, வி.சி., வழக்கறிஞர்கள், திருமாவளவன் ஆதரவாளர்கள் உள்பட பலர் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். ஆனால் இவ்விவகாரத்தில், திருமாவளவன் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதோடு, ஆணவமாக பேசி வருகிறார். காயம் அடைந்த வழக்கறிஞர் அளித்த புகார் மீது, இதுவரை வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பார் கவுன்சில் அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, பார் கவுன்சிலும் போலீசில் புகார் தெரிவிக்காததோடு, அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. திருமாவளவன், பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர். இதே செயலை வேறொரு கட்சியை சார்ந்தவர் அல்லது வேறொரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் மேற்கொண்டு இருந்தால், இதே நிலைப்பாட்டை தான் பார் கவுன்சில் மேற்கொண்டு இருக்குமா? எனவே, பார் கவுன்சில் தலைவர், தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீதும், திருமாவளவன் மீதும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Venkatesaperumal
அக் 20, 2025 04:45

மிகவும் சரியான கருத்து


Ananthanarayanan Aa
அக் 15, 2025 18:41

மிக நல்ல செய்தி


நிக்கோல்தாம்சன்
அக் 14, 2025 05:10

ஆணவத்தோடு பேசிய திரமாவின் மீது ஜனாதிபதி அவர்கள் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கலாமில்லையா?


Tetra
அக் 16, 2025 20:43

அவர் என்ன செய்வார் . பாவம். தமிழக அரசுக்கு அனுப்புவார். ஸ்டாலின் அரசு வழக்கம் போல் குப்பையில் தூக்கி எறிந்து விட்டு எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி விடும். திரும்ப கேட்டால் இருக்கவே இருக்கிறது. உச்ச நீதி மன்றம். கபாலி சிப்பல், அபிஷேக் அசிங்வீ, முக்கால் ரோதனை ஆகியோர் ஆஜர் என்று வந்து விடுவார்கள். வக்கீல் பீஸா? நாம்தான் கொடுக்கணும்