உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை கேட்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை-19) மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்புமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர், இடமாற்று சான்றிதழில் (டி.சி) பள்ளிக் கட்டணம் செலுத்தாதது அல்லது காலதாமதம் செய்வது தொடர்பாக பள்ளி நிர்வாகங்கள் 'தேவையற்ற பதிவுகள்' செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.'ஏதேனும் மீறினால், 2009 ஆம் ஆண்டின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) பிரிவு 17 -ன் கீழ் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பொருந்தும் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தமிழ்நாடு கல்வி விதிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை விதிகளை மறுபரிசீலனை செய்யவும், அதன்படி, மூன்று மாதங்களுக்குள் ஆர்டிஇ சட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப தேவையான அனைத்து திருத்தங்களையும் செய்யுமாறு மாநில அரசுக்கு பெஞ்ச் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை